தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் மனிதன், விலங்குகளின் உடல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்

பொதுத்தேர்தலில் களமிறங்கும் கிரிக்கெட் நட்சத்திரம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 08:21.34 AM GMT ]
தற்போதைய தேசிய கிரிக்கெட் அணியை பிரிதிநிதித்துவப்படுத்தும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர், எதிர்வரும் பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடந்து கொண்டிருக்கும் உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கு பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக மஹேல ஜயவர்த்தன அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeq3.html

மனைவிக்கு 50 பேரின் பாதுகாப்பை கோரும் மகிந்த!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 08:56.58 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவிக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 50 பேர் கொண்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புக்கு நான்கு பாதுகாப்பு படையினரே வழங்கப்பட்டுள்ளன. எனினும் தனக்கு இரண்டு பேரின் பாதுகாப்பு போதுமானது என அவர் கூறியுள்ளார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு படையினரை அவர், தனது மகன் யோஷித்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 100 படையினரின் பாதுகாப்பையும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு 50 படையினரின் பாதுகாப்பையும் வழங்கியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeq6.html



யாழ்.கல்லுண்டாய் வெளி பகுதியில் மனிதன், விலங்குகளின் உடல் கழிவுகள் கொட்டப்படுவதை கண்டித்து மக்கள் போராட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:36.25 AM GMT ]
யாழ்.கல்லுண்டாய் வெளிபகுதியில் யாழ்.மாநகரசபை மற்றும் பல உள்ளூராட்சி சபைகளினால் கண்மூடித்தனமாக கழிவுகள் கொட்டப்படுவதனை கண்டித்து நவாலி, அரசடி மற்றும் ஆணைக்கோட்டை பகுதி மக்கள் இன்றைய தினம் காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
மேற்படி பகுதியில் கண்மூடித்தனமாக கழிவுகள் மற்றும் மனிதன், விலங்குகளின் உடல் கழிவுகள் மற்றும் மலக்கழிவுகள் கொட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் கல்லுண்டாய் பகுதியை அண்மித்திருக்கும் ஆணைக்கோட்டை, நவாலி மற்றும் அரசடி பகுதி மக்கள் துர்நாற்றம், நுளம்பு, இலையான் போன்ற பல பிரச்சினைகளுக்கும், தோல்வியாதிகள், வயிற்றோட்டம் போன்ற பல நோய்களுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் விடயம் குறித்து பல தரப்பினரிடமும் முறைப்பாடு கொடுத்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையினை கண்டித்தே மக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இன்றைய தினம் காலை யாழ்ப்பாணம்- வட்டுக்கோட்டை வீதியில் ஆணைக்கோட்டை பகுதியிலிருந்து பாதிக்கப்பட்ட மேற்படி பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலை 9மணிக்கு ஊர்வலமாக நடந்து சென்று கல்லுண்டாய் வெளிகுப்பை கொட்டப்படும் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதன்போது அந்தப் பகுதிக்கு யாழ்.மாநகரசபை ஆணையாளர். எஸ்.பிரணவநாதன் வருகை தந்திருந்தார்.
எனினும் வாகனத்தில் இருந்து இறக்காமல் இருந்த அவரை கீழே இறங்குமாறு மக்கள் கேட்டபோதும் அவர் இறங்கவில்லை.
பின்னர் மக்களுடைய இந்த கடுமையாக கோரிக்கைக்கு மத்தியில் கீழே இறங்கிய அவர் மக்களுடன் பேசினார். இதன் போது குறித்த பகுதியில், கழிவுகளை கொட்டவேண்டாம் என கூறுவதற்கு முதலமைச்சருக்கும், நீதிமன்றத்திற்கும் மட்டுமே அதிகாரம் உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் இதனை எதிர்த்து நீதிமன்றம் செல்வதென்றால் செல்லுங்கள் என கூறினார்.
மேலும் கண்மூடித்தனமாக மலக் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகள் கொட்டப்படுவதாக மக்கள் முன்வைத்த, குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார். ஆனால் மக்கள் உன்மையில் கொட்டப்படுவதில்லை என்றால் நேரில் சென்று பார்வையிடுமாறும், தங்களுடைய கிராமங்களுக்கு வந்து நிலைமையினைப் பார்வையிடுமாறும் மக்கள் கோரினர்.
பின்னர் கல்லுண்டாய் வெளியில் குப்பை கொட்டுவதற்கு தமக்கு உரித்து உள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் அவ்வாறு உரித்து உண்டானால் அதனை ஒரு வாரத்திற்குள் காண்பிக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அதற்கு ஒத்துக் கொண்ட ஆணையாளர் அதனை நிரூபிப்பதாக கூறிச் சென்றதனையடுத்து குறித்த குப்பை கொட்டும் பகுதியை கொங்கிறீட் தூண்களைக் கொண்டு மறைத்து, மக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKder2.html

Geen opmerkingen:

Een reactie posten