தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

தமிழர்கள் தொடர்பில் கதைப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு அருகதை இல்லை!

வலிகாமம் மக்களது குடிநீருக்காக வெள்ளவத்தையில் ஆர்ப்பாட்டம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 08:57.02 AM GMT ]
யாழ் வலிகாமம் மக்களது குடிநீருக்காக இன்று காலை வெள்ளவத்தையில் சமுக நலனுக்காக ஒருங்கிணைந்த இளைஞர்கள் அமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
இவ்வார்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்தரணிகள், புத்திஜீவிகள், கொழும்பில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது முன்வைத்த யோசனைகள் பின்வருமாறு,
யாழ் குடாநாட்டின் வலிகாமம் பகுதி நிலத்தடி நீரில் என்ணெய் கழிவுகளின் கலப்பினால் பாதிக்கப்படட கிணறுகளின் எண்ணிக்கை பாதிப்பின் அளவு பாதிப்பின் தன்மை போன்றவை தொடர்பான தகவல்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிப்படுத்தல் வேண்டும். 
இது தொடர்பாக இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகளின் முடிவுகளை சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடியாகப் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வருதல் வேண்டும்.
பாதிப்பின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து மக்களுக்கு தெரியப்படுத்தல் வேண்டும்.
நீர் மாசடைவுக்குக் காரணமானவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி தாமதிக்காமல் மக்களுக்கு நீதியை வழங்க வேண்டும்.
நீர்த்தாங்கிகளில் குடிநீர் விநியோகிப்பது சரியான உடனடித் தீர்வல்ல. மாறாக கிணற்றை நம்பி வாழும் மக்கள் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்துக்கும் அதே கிணற்று நீரைப் பயன்படுத்தும் வண்னம் சுத்திகரிப்புக் கருவிகளை அரசு மக்களுக்கு வழங்க வேண்டும்.
கருவிகளை இயக்குவதற்கான எரிபொருளையும் மின்சாரத்தையும் மாணியமாக வழங்க வேண்டும. இவற்றுக்கான செலவினை நீரை மாசுபடுத்தியவர்களிடம் இருந்து அறவிட வேண்டும்.
நீர் மாசினால் ஏற்படக்கூடிய தீங்குகள் தொடர்பில் மக்களுக்கு போதிய தகவல்களை வழங்கி தொடர்ந்தும் அறிவூட்டல் வேண்டும்.
உள்நாட்டு வெளிநாட்டு நிபுணர்களின் உதவியினை உடனடியாக பெற்ற மாசடைந்த நீரை நீண்டகாலப் பயண்பாட்டுக்குத் தூய்மைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.
பிராந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் நீர்மாசமைவு தொடர்பான ஆய்வுகளுக்கும் தீர்வுகளுக்கும் தங்களாலான பங்களிப்புக்களைச் செய்ய உடனடியாக முன்வர வேண்டும்.
மத்திய அரசாங்கமும். வடக்கு மாகாண சபையும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் எதுவித தொய்வுமின்றி தொடாந்தும் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதி மக்களும் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படை உரிமையை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.
போன்ற கோரிக்கைகள் அடங்கிய மகஜரில் கையெழுத்திட்டு ஜனாதிபதி, பிரதமர் நீர்விநியோக அமைச்சர், வடக்கு மாகணசபை முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeq7.html

கடலோரங்களில் உல்லாச விடுதிகளை நிர்மாணிக்க இடமளிக்கப் போவதில்லை: பிரதமர்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:11.09 AM GMT ]
எதிர்வரும் காலத்தில் கடலோர பகுதிகளில் அதிக உயரமான உல்லாச விடுதிகளை நிர்மாணிக்க இடமளிக்கப் போவதில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலி பிரதேசத்தில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களை சந்திக்கும் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும் அதி உயர் கட்டிடங்களால் கடலோர பகுதிகளில் சூழல் பாதிப்பு ஏற்படுவதாக அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் தென்னைமரங்களை விட அதிக உயரத்தில் கட்டிடங்களை அமைக்க தடைவிதிக்கப்படும்.
அதேநேரம் நாட்டின் சுற்றுலாத்துறை அபிவிருத்திக்கான பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

முஸ்ஸிம்களுக்கு எதிரான வன்முறையை ஆராய குழு அமைக்குமாறு வேண்டுகோள்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:27.28 AM GMT ]
கடந்த நான்கு வருடங்களாக முஸ்ஸிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல், வெறுக்கத்தக்க பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய ஆணைக்குழு அமைக்கபடல் வேண்டும் என முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
மேலும் முழு இலங்கையர்களையும் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னைய ஜனாதிபதி மகிந்த உறுதி அளித்தவாறு அளுத்கம, பேருவளை கொலைகளுக்கு தூண்டுகோலாக இருந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படவில்லை என்பதையும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
அத்தோடு முஸ்ஸிம் மக்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அக்கடிதத்தில் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKderz.html

வெளிவிவகார அமைச்சரின் பயணம் வெற்றி: அரசாங்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:31.39 AM GMT ]
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அமெரிக்க விஜயம் வெற்றியளித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 8ம் திகதி அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சரின் இவ்விஜயத்தின் போது இலங்கை மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் அமெரிக்காவுக்கும், ஐ.நா சபைக்கும் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இணைந்து செயற்படத் தயாரில்லை என அமெரிக்கா தெரிவித்து வந்த நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள பல்வேறு முனைப்புக்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த முனைப்புக்கள் வெற்றியளித்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் தொடர்பில் கதைப்பதற்கு சரத் பொன்சேகாவுக்கு அருகதை இல்லை
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:35.00 AM GMT ]
இனவாதத்தைத் தூண்டி நன்மை பெற வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். கூடவே, போரில் மனிதப் படுகொலை இடம்பெறவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ் இனப் படுகொலை நடைபெற்றது என்ற தீர்மானம் வடக்கு மாகாண சபையில் நிறைவேறியதால் சீற்றமடைந்த சரத் பொன்சேகா போரில் மனிதப் படுகொலை இடம்பெறவில்லை என்று கூறுவது நகைப்புக்குரியது.
குற்றவாளி ஒருவர் தான் குற்றம் செய்யவில்லை என்றே கூறுவான். அதற்காக அதை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?
வன்னியில் நடந்த போரில் தரைவழிப் போரை தானே வழிப்படுத்தியதாகவும் படையினருக்கு கட்டளைகளைப் பிறப்பித்தது தானே என்றும் கூறும் சரத் பொன்சேகா, எனவே போரில் மனிதப் படுகொலை இடம்பெறவில்லை என்றும் கூறியுள்ளார்.
வன்னியில் நடந்த இறுதிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப் படங்கள் மிகப் பெரும்சாட்சி.
இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்ற தீர்மானம் ஐ.நா அரங்கில் நிறைவேறியிருக்கும் வேளையில் மனிதப் படுகொலை நடக்கவில்லை என்று சரத் பொன்சேகா கூறுவது எந்த வகையில் நியாயமாகும்?
தமிழ் இனத்தின் கருவறுத்து கயமை புரிந்ததில் சரத் பொன்சேகாவுக்கு பெரும் பங்கு உண்டு. எனவே தமிழ் இனம் தொடர்பில் அவர் எந்த வகையிலும் கருத்து உரைப்பதற்கு தகுதி அற்றவர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்னிப்புப் பெற்று, இழந்த பட்டங்களை பெறுவது போல இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் உயிர்களை மீளப்பெற முடியாது என்பதை பொன்சேகா முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த நாட்டில் தமிழர்கள் வாழ முடியுமே தவிர ஆளவும் முடியாது, உரிமை கேட்கவும் முடியாது என்று இனவாதம் கக்கிய சரத் பொன்சேகாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிக்கலாம். ஆனால் தமிழ் மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
ஒரு முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருக்கலாம். அதற்காக தான் செய்த கொடுமைகளை தமிழ் மக்கள் மறந்து விட்டார்கள் என்று சரத் பொன்சேகா கருதியிருப்பாராயின், அது அவர் சிறையில் அடைபட்டதன் பின்னர் அவரின் மனநிலையில் ஏற்பட்ட மாற்றமாக இருக்க முடியுமே அன்றி வேறு எதுவுமாக இருக்க முடியாது.
தமிழ் இனப் படுகொலை நடைபெறவில்லை என்று கூறும் சரத் பொன்சேகா, மைத்திரியின் மன்னிப்போடு பெற்ற பட்டம் என்பது, தமிழ் மக்கள் போட்ட பிச்சையின் பிச்சை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
எதுவாயினும் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை என்பதை வலியுறுத்தி அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலமாகவே சரத் பொன்சேகா போன்ற இனவாதிகளை வேரோடு பிடுங்க முடியும் என்ற உண்மையை தமிழர் எவரும் மறந்து விடலாகாது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறந்துவிடக் கூடாது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKder1.html

Geen opmerkingen:

Een reactie posten