தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 21 februari 2015

சர்வதேச விசாரணையாளர்களை புதிய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்: அரியநேத்திரன் கோரிக்கை

மஹிந்தவை பிரதமர் வேட்பாளராக்குவது அவமரியாதை: துமிந்த
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 09:18.05 AM GMT ]
இரு தடவைகள் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமையோடுள்ள மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிட வைப்பது அவரை அவமரியாதைக்கு இட்டு செல்லும் செயல்.
மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மாத்திரமல்லாது 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்தவர் எனும் பெருமையையும் உடையவர் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதி செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர் தோல்வியடைந்த போதிலும் அவருக்குரிய கௌரவத்துடனேயே அவர் இன்றும் மக்களால் பார்க்கப்படுகின்றார்.
இந்நிலையில் அவரை பிரதமர் பதவிக்கு போட்டியிட நியமிப்பது அவர் மீதுள்ள மரியாதையை குறைக்கும் ஒரு செயலாகவே நான் கருதுகின்றேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த காலத்தில் போலல்லாது அடுத்த தலைமுறை தலைமைத்துவத்தையும் வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr2H.html
 
 
 
 
மஹிந்த அரசு அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கிய நிதி மைத்திரி அரசினால் முடக்கம்
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 09:39.40 AM GMT ]
இலங்கை பற்றிய பிரதிபலிப்புக்களை மேம்படுத்தும் நோக்கில் மஹிந்த அரசாங்கத்தால் அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட நிதியை நிறுத்துவதற்கு புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கடைசி சில மாதங்களில் அரசியல் மற்றும் பொருளாதார இலாப நோக்கங்கருதி பெருந்தொகை பணம் இவ்வாறு செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
2014ம் ஆண்டு எட்டு ஒப்பந்தங்களுக்காக மாதாந்தம் ஐயாயிரம் அமெரிக்க டொலர் முதல் 75 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வரை, கடந்த அரசாங்கத்தால் வெளிநாட்டு அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த கால அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையினால் குறைந்தபட்ச அனுகூலங்களே கிடைத்துள்ளதாகவும் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
 http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr3A.html


சர்வதேச விசாரணையாளர்களை புதிய அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்: அரியநேத்திரன் கோரிக்கை
[ சனிக்கிழமை, 21 பெப்ரவரி 2015, 10:05.41 AM GMT ]
ஐ.நா.விசாரணையை ஆறு மாதங்கள் நீடிப்பு கேட்ட இந்த அரசாங்கம் கடந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களுக்கு விதித்திருந்த தடையினை நீக்கி நேரடியாக சர்வதேச விசாரணையாளர்கள் வடக்கு கிழக்கு பகுதிக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கையெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட கறுவேப்பங்கேணி,விபுலானந்தா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் ஞா.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு செலான் வங்கி முகாமையாளர் பத்மஸ்ரீ இளங்கோ,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்த ஆட்சி மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணசபையில் எஞ்சியிருக்கும் இரண்டரை வருடங்களில் அமையவுள்ள ஆட்சியில் இணைந்து செயற்படுவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
கிழக்கு மாகாணசபையில் அங்கம் வகித்து பின்தங்கிய பகுதிகளில் சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். கிழக்கு மாகாண மக்கள் ஒன்றை நாங்கள் புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் பற்று உறுதியுள்ள அரசியல் தலைமையினை கட்டியெழுப்பக்கூடியவர்களாக நாங்கள் மாறுவோமாக இருந்தால் நாங்களும் பல மாற்றங்களைச் செய்யமுடியும்.
இந்த அரசாங்கத்தில் தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதியொருவர் பதவியேற்றுள்ளார்.100நாள் வேலைத்திட்டம் ஒன்றை தனது செயற்றிட்டமாக முன்னெடுத்தார். அந்த நூறு நாள் வேலைத்திட்டத்தில் 42 நாட்கள் முடிந்துவிட்டது.
இன்று 58 நாட்களே இந்த ஆட்சியை கொண்டு இழுப்பதற்கான சூழ்நிலையிருக்கின்றது. அதற்கிடையில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசியல் சீர்திருத்தத்தினை கொண்டுவருவதாக கூறியிருக்கின்றார். அரசியல் அமைப்பு மாற்றத்தினை முன்வைப்பதாக கூறியிருக்கின்றார்.
அவ்வாறான அரசியல் அமைப்பு மாற்றம் வருமாக இருந்தால் இலங்கையில் இருக்ககூடிய அனைத்து சிறுபான்மை மக்களினதும் அரசியல் உரிமையை உறுதிப்படுத்தக்கூடியவாறு, அவர்களின் தனித்துவத்தினை பாதுகாக்ககூடியவாறு இருக்கவேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
இன்று சமாதானம் வந்துவிட்டது, ஆட்சிமாற்றம் வந்துவிட்டது, தற்போது அனைத்தும் கிடைத்துவிட்டது என சிலர் கருதுகின்றனர். காணாமல் போனவர்வகள் தொடர்பில் மட்டக்களப்பிலேயே மூன்றுக்கு மேற்பட்ட போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளது.
அதேசமயத்தில் வடக்கு கிழக்கின் பகுதிகளிலும் நடைபெறுகின்றது. ஆனால் எந்தவித சிறையும் இல்லாமல் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் தடுப்பு முகாம் உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதில் 700 தமிழ் மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூட கூறுகின்றார்கள்.
அதன் உண்மைத்தன்மை தொடர்பில் விசாரணைகளை நடாத்தவேண்டிய பொறுப்பு தற்போதைய ஜனாதிபதி மற்றும்  பிரதமருக்கு உள்ளது. இதனை அவர்கள் ஒரு வதந்தியாகவோ, செய்தியாகவோ விட்டுவிடமுடியாது. கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வெள்ளைவான்களில் கடத்தியவர்களின் பெயர்களை மக்கள் கூறுகின்றனர்.
அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆணைக்குழுக்களை அமைத்து அதன் பரிந்துரைகளின் கீழ் மரணச்சான்றுகளை வழங்குவதான வாக்குறுதியை அளித்தார்களானால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாங்கள் காணாமல்போனவர்கள்,கொல்லப்பட்டவர்களுக்கான நீதியையே கேட்கின்றோம். யார் கடத்தினார்களோ அவர்களுக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். அந்த விசாரணை மூலமாக கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
அந்த தண்டனை என்பது உள்ளூர் விசாரணை மூலம் கிடைக்கும் என்பதை நாம் நம்பவில்லை. தற்போது சர்வதேச ரீதியான விசாரணையாக உருவாகியுள்ள ஐ.நா.வின் விசாரணை ஊடாக இந்த மக்களுக்கான நீதி தேவையாகவுள்ளது.
அதனையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. ஆனால் இந்த அரசாங்கமோ ஆறு மாதங்கள் கால அவகாசம் கேட்டு அந்த ஐ.நா.விசாரணையை பிற்போட்டுள்ளார்கள். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது.
இந்த அரசாங்கம் ஒன்றைச்செய்ய வேண்டும். கடந்த அரசாங்கம் சர்வதேச விசாரணையாளர்களுக்கு விதித்திருந்த தடையினை நீக்கி நேரடியாக சர்வதேச விசாரணையாளர்கள் இங்கு வருவார்களானால் வடகிழக்கில் பலர் நேரடியாக சாட்சியமளிக்க தயாராகவுள்ளனர்.
அதனை இந்த அரசாங்கம் செய்யத்தவறுமாகவிருந்தால் தமிழ் மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆறுமாத நீடிப்பினைக் கேட்ட அரசாங்கம் மேற்படி விடயங்களை செய்வதற்கு முன்வரவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyCRVSUnr3C.html

Geen opmerkingen:

Een reactie posten