[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 10:40.47 AM GMT ]
அரசியல் கட்சிகளின் வாசலுக்கும் போராட்டங்களுக்கும் சென்று சென்று எங்கள் குடும்பங்களின் நலிந்துபோயுள்ளன.நாம் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம் என அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
எமது விடுதலை நாளுக்காக ஒவ்வொரு நாளும் ஏங்கிவருகின்றோம். எமது குடும்பங்களும் தினம் தினம் எங்கள் வரவுக்காய் காத்திருக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தின் மூலம் எமக்கு ஒரு புதுவாழ்வு கிடைக்குமென்று நம்பிக்காத்திருக்கின்றோம்.
தற்பொழுது எங்கள் விடுதலைகோரி வடக்கு கிழக்கில் எங்கள் உறவுகள் ஜனாதிபதியையும் புதிய அரசாங்கத்தையும் நோக்கி எங்கள் விடுதலைக்காய் கோரிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த நாட்டின் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்த வாழும் மக்களில் ஒரு சிலர் இனவாதத்தை தூண்டி எமது விடுதலையை தாமதப்படுத்த முயல்வதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
நாம் அறிகின்ற சில சேதிகள் கவலை தருவதாகபடுகின்றது. இந்த நாட்டில் இன்னும் பயங்கரவாத சட்டம் நீக்கப்படவில்லை.
தென்னிலங்கை மக்களுக்கு இன்னும் எம்மை பற்றிய புரிந்துணர்வு ஏற்படவில்லை.இந்த நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களின் கருத்துக்களும் போராட்டங்களும் எமக்கு குந்தகமாக அமைந்துவிடக்கூடாது என வேண்டுகின்றோம்.
எங்களை கொஞ்சம் வெளியில் வந்து பிள்ளைகளோடு வாழ உதவுங்கள், எம்மை பற்றிய புரிதலற்ற தன்மையில் இருந்து தென்னிலங்கையின் அப்பாவி சிங்கள சகோதர, சகோதரிகள் விடுபட நிலத்திலும் புலத்திலும் வாழ்கின்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவது அவசியம்.
இப்பொழுது நமக்கு தேவை காணாமல் போன நமது உறவுகள் நமக்கு கிடைக்கவேண்டும். சிறையில் பல ஆண்டுகளாக தம் இளமைகளை தொலைத்து வாழ்கையை தொலைத்து வதைகின்றவர்கள் விடுதலையாகவேண்டும்.
இந்த மானுட ஏக்கம் அனைவருக்கும் புரியும் என நினைக்கின்றோம் என இலங்கையில் சிறையில் உள்ள அரசியல் கைதிகள் கருத்துத்தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdku2.html
மிதக்கும் ஆயுத கப்பல் குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும்: ருவான் விஜேவர்தன
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 10:41.06 AM GMT ]
ரத்ன லங்கா மற்றும் அவன்ட் க்ரேட் ஆகிய தனியார் நிறுவனங்களின் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
இவ்விரு நிறுவனங்களுடனும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமான தொடர்பு காணப்பட்டமை தெரியவந்துள்ளது.
மேலும் மிதக்கும் ஆயுத கப்பலின் ஊடாக திரட்டப்பட்ட வருமானத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிதக்கும் ஆயுதக் கப்பலுக்கான அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
குறித்த விசாரணைகள் பக்கசார்பற்ற முறையில் மேற்கொள்ளப்படும் எனவும், தனியார் நிறுவனமொன்று பாரியளவில் ஆயுதங்களை பேணுதல் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdku3.html
நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுக்களும் இல்லை: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 10:53.53 AM GMT ]
அத்துடன் நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு சட்டத்தை அமுல்படுத்தும் எந்த தயார் நிலைகளும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் காரணங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டுச் சென்றனர். இவ்வாறு நாட்டை விட்டுச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு எதிராக புலனாய்வு பிரிவு, பயங்கரவாத விசாரணைப் பிரிவு, விசேட விசாரணைப் பிரிவு, சர்வதேச பொலிஸ் உட்பட எந்த விசாரணைப் பிரிவுகளாலும் எவ்விதமான விசாரணைகளும் நடத்தப்பட மாட்டாது எனவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdku4.html
Geen opmerkingen:
Een reactie posten