தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 7 februari 2015

சிறுவர்களின் பிரச்சினைகளை முறையிட புதிய தொலைபேசி பிரிவு!

பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு,கல்லடி ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 10:26.05 AM GMT ]
மட்டக்களப்பு, கல்லடி அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தினை முன்னிட்டு அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை முதல் நடைபெற்றுவருகின்றது. நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00மணி வரையில் இந்த எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஆலய பரிபாலனசபையினர் தெரிவித்தனர்.
முன்னூரு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் மஹா கும்பாபிசேக கிரியைகள் வியாழக்கிழமை ஆரம்பமானது. ஆலயத்தின் புனராவர்த்தன,ஜீனோர்த்தன,அஸ்டபந்தன,நவகுண்டபக்ஸ, இராஜகோபுர மஹா கும்பாபிசேக பெருவிழா திங்கட்கிழமை வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
வவுனியா குருமண்காடு ஸ்ரீவிநாயகர் ஆலய பிரதம குரு ஆகம கிரியா பாவலர்,சிவாச்சாரிய திலகம்,ஆகம கிரியாமணி சிவஸ்ரீ நாராயணசண்முகநாதக்குருக்களினால் கும்பாபிசேக பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன. திங்கட்கிழமை காலை 6.50தொடக்கம் 7.25மணி வரையுள்ள சுபவேளையிவல் மஹா கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.
இதேநேரம் இன்று காலை முதல் நடைபெற்றுவரும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் நாடெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdku1.html

தட்டுப்பாடின்றி சந்தைக்கு அரிசி
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 10:14.46 AM GMT ]
அரிசி தட்டுப்பாடின்றி சந்தைக்கு கொண்டு செல்வதற்கு உணவு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது.
தற்போது நெற் களஞ்சியசாலைகளில் தற்போது காணப்படும் நெல் உட்பட புதிய களஞ்சியசாலைகளில் காணப்படும் நெற்தொகைகளை தேடி பார்க்கவும், நெல் விற்பனை சபை அதிகாரிகளை அநுராதபுரம், நிகவெரட்டிய, பொலனறுவை, ஆகிய பகுதிகளில் காணப்படும் களஞ்சியசாலைகளை பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறுவர்களின் பிரச்சினைகளை முறையிட புதிய தொலைபேசி பிரிவு!
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 10:01.50 AM GMT ]
சிறுவர்களின் மன ரீதியான உளைச்சல்கள் தொடர்பில் சிறுவர்களாலேயே முறையிடக் கூடிய சிறுவர் நட்பு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தவதற்கு சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறுவர்களுக்கு ஏற்படும் மன காயங்கள், மன அழுத்தங்கள், மன ரீதியான உளைச்சல்கள் உள்ளிட்ட பிரச்சினைனளை குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம்.
சிறுவர்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகள், பல்வேறு தொல்லைகள், தொடர்பில் இதுவரை 1929 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடப்பட்டது.
குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாகவே இப் புதிய தொலைபேசி பிரிவு அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக சிறுவர் விவகார பிரிவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சிறார்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய, சிறுவர் மன நிலையை புரிந்து கொண்ட அதிகாரிகளுடன் இம் முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.
மேலும் சிறுவர் விவகார அமைச்சர் ரோசி சேனாநாயக்கவின் ஆலோசனையின் பிரகாரம் இப்புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தவும், இதற்காக தனியான பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkuy.html

Geen opmerkingen:

Een reactie posten