[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 01:04.31 PM GMT ]
இக் கூட்டத்திற்கு அதிதியாக புத்தசாசன மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கரு ஜெயசூரிய கலந்து கொண்டிருந்தார்.
எனினும் கரு ஜெசூரியவை அழைத்து வந்த டக்ளஸ் தேவானந்தா நூலக கேட்போர் கூடத்தில் விட்டுவிட்டு கூட்ட அறையை விட்டு வெளியேறினார். தொடர்ந்தும் ஈ.பி.டி.பி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வடக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, வடக்கு மாகாண சபை உறுப்பினர் தவநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் குறித்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் அதிதிகளின் பெயர்கள் இருக்கைகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அவற்றில் டக்ளஸ் தேவானந்தாவின் பெயர் குறிப்பிட்டோ அல்லது ஆசனமோ ஒதுக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தவர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
தமிழினப் படுகொலைக்கு பரிகார நீதி கோரி அனைத்துலக விசாரணை நோக்கி நா.தமிழீழ அரசாங்கம் தீவிரம்!
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 01:04.45 PM GMT ]
அனைத்துலக விசாரணையினால் ஏற்படப் போகும் அபாயங்களில் இருந்து சிங்கள தேசம் தன்னுடைய நலன்களை பாதுகாகத்துக் கொள்வதற்காக, ஆட்சிமாற்றம் எனும் புதிய முகத்துடன் இரத்தும் தோய்ந்த தனது கரங்களை அனைத்துலக அரங்கில் மூடிமறைத்து வருகின்றது.
இவ்வேளை சிங்களத்தின் தமிழன அழிப்பின் இரத்தம் தோய்ந்த முகத்தினை அனைத்துலக அரங்கில் அம்பலப்படுத்தி, தமிழர்களுக்கான பரிகார நீதியினை அனைத்துலகத்திடம் கோரி, தனது செயற்பாட்டினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.
இராஜதந்திரத்தளம், மனித உரிமைத்தளம், மக்கள்தளம், பரப்புரைத்தளம், ஊடகத்தளம் என பன்முகத்தளத்தில் அனைத்துலக விசாரணையினை நோக்கிய செயல்முனைப்பினை மேற்கொண்டுள்ளது.
இராஜதந்திரத்தளம்:
ஐ.நா மனித உரிமைச்சபையில் அங்கத்துவம் வகிக்கின்ற நாடுகளை நோக்கி நேரடியாகவும், நாடுவாரியாக உள்ள தூதரங்கள் ஊடாகவும் தொடர்சியான சந்திப்புக்கள்.
மனித உரிமைத்தளம்:
அனைத்துலக விசாரணைக்கான கோரிக்கைக்கு, புலம்பெயர் தேசங்களில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள், சமூக -அரசியற் பிரதிநிதிகளின் தோழமையினைத் திரட்டல்.
மக்கள்தளம்:
அனைத்துலக விசாரணையினை வலியுறுத்தி தாயகம் புலம் தமிழகம் ஆகிய தளங்களில் பல லட்சம் ஒப்பங்களை இலக்காக கொண்டு மாபெரும் கெயெழுத்துப் வேட்டை.
பரப்புரைத்தளம்
மார்ச் 16ம் நாள் ஐ.நாள் மனித உரிமைச்சபை முன்றலில் இடம்பெறவிருக்கின்ற நீதிக்கான போராட்டத்துக்கு பரப்புரை
புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் மத்தியிலும் தமிழகத்திலும் தொடர்சியான பரப்புரைக்கூட்டங்கள். கருத்தரங்குகள்.
வேற்றின மக்களிடத்தில், சிங்களத்தின் தமிழின அழிப்பின் கோர முகத்தினை அம்பலப்படுத்தியும், ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வெளிப்படுத்தியும், லண்டனில் பிரச்சார பயணம்.
ஊடகத்தளம்
அனைத்துலக விசாரணைக்கான பொறிமுiயினை உருவாக்குவதற்கான வலுவானதொரு கருத்துருவாக்கத்தினை அனைத்துலக ஊடகத்தளத்தில் ஏற்படுத்தும் செயற்பாடுகளோடு ,https://www.facebook.com/InternationalInvestigationNOW சமூக வலைத்தளங்கள் ஊடான பரப்புரை.
இவ்வாறு பன்முகத்தளங்களில் தனது செயற்பாட்டினை தீவிரப்படுத்தியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், ஐ.நா மனித உரிமைச்சபையினை மையப்படுத்திய தனது நான்காவது ஆவணக் கையேட்டினையும் வெளியிடுகின்றது.
இதேவேளை ஐ.நா மனித உரிமைச் சபையிலும் கூட்டத் தொடர் நாட்களில் தனியாகவும் கூட்டாகவும் செயற்பாடுகளை ஜெனீவாவில் மேற்கொள்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaSUnozB.html
நாமலின் நீலப்படையணி இயங்காது
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 01:53.25 PM GMT ]
பிபிசிக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ரக்ன லங்கா ஊழியர்களுக்கு சம்பளங்கள் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் பிரிவாக நீலப் படையணி விளங்கியமை குறிப்பிடத்தக்கது.
ரக்ன லங்கா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை!
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 02:45.12 PM GMT ]
சர்வதேச கடற்பரப்பில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ரக்ன லங்கா நிறுவன ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளங்கள் வழங்கப்படவில்லை.
இந்தியா சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழுவினர், நாளை 17-ம் திகதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் சிறப்பு பிரார்த்தனை நடத்தவுள்ளனர்.
இதுவரையில் சம்பளம் வழங்கப்படவில்லை என அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொழில் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் குறித்த ஊழியர்கள் பணியாற்றி வரும் கப்பல் நிறுவனங்கள் ரக்ன லங்கா நிறுவனத்திற்கு சம்பளங்களை செலுத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இவ்வாறு சம்பளங்களை நிறுத்தி வைப்பது மோசடியான செயற்பாடாகும்.
இது குறித்து அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்துää ஊழியர்களின் சம்பள நிலுவையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்சவிற்கும் ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு எனத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மீட்கப்பட்ட மிதக்கும் ஆயுதக் கப்பல் களஞ்சியம் இந்த நிறுவனத்திற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மைத்திரிபால குழுவினர் நாளை திருப்பதியில் தரிசனம்!
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 03:08.56 PM GMT ]
அங்கிருந்து திருப்பதி செல்லும் ஜனாதிபதி குழுவினர் ஏழுமலையானை தரிசிக்கவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் புதன்கிழமை காலை கொச்சின் விமான நிலையத்திலிருந்து கொழும்பு புறப்படுகிறார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten