மக்களை கொன்று குவித்து எதை சாதிக்க போகிறீர்களா: ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி (வீடியோ இணைப்பு)
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை நேரில் சந்தித்த மூதாட்டி ஒருவர், அவர்களிடம் மக்களை கொன்று குவிக்க சொல்லி உங்களிடம் அல்லாதான் சொன்னாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி, தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள், தண்டனை என்கிற பெயரில் அப்பாவி மக்களைப் படுகொலை செய்து வருகிறது.
இந்நிலையில், ஜோர்டான் நாட்டு விமானப் படை, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இருப்பிடத்தில் குண்டு வீசிக் கலைத்தபோது, காரில் தப்பிய ஒரு ஐஎஸ்ஐஎஸ் குழுவை மடக்கிய, மூதாட்டி ஒருவர் மக்களைக் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கச் சொல்லி, அந்த அல்லாதான் உங்களுக்கு ஆணையிட்டாரா? அல்லது அவருக்கு அர்ப்பணிக்கிறீர்களா? நான் சத்தியமாகச் சொல்கிறேன், நீங்கள் யாரும் கடவுள் வழியில் செல்லவில்லை.
கொலை செய்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்? உங்களுக்கு என்ன வேண்டும்? அமைதியான வழியில் உங்களுக்குப் போராடத் தெரியாதா? கொலை செய்வது சட்டத்தில் மட்டுமில்லை, மனித குலத்திலேயே தடை செய்யப்பட்ட விடயம்.
அதைத்தான் நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். நீங்களும் யாரையும் கொலை செய்யாதீர்கள், உங்களையும் யாரும் கொல்லமாட்டார்கள் என்று கோபத்தில் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten