இலங்கையில் சுதந்திரத்தின் பின் ஆட்சி செய்த அத்தனை அரசாங்கங்களும் முஸ்லிம் தலைவர்களையும் மக்களையும் அரவணைத்துப் போகின்றப்போது தமிழ் அரசியல்வாதிகளையும் மக்களையும் நம்பாதது ஏன் என்ற ஒரு பொதுவான கேள்வி எமது மனதில் தோன்றியதன் விளைவே இந்த கட்டுரையாகும்.
இதில் எந்த சமூகத்தையும் விமர்சனம் செய்யவோ, அவர்களின் மீது வெறுப்புணர்ச்சியை தூண்டுவதோ எமது நோக்கமில்லை. ஆனால் உண்மையை வெளிக்கொணர்வதே எமது எதிர்பார்ப்பாகும்.
1948ஆம் ஆண்டுக்கு முன் ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்களின் விசுவாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக தமிழ் மக்கள் இருந்து வந்துள்ளார்கள்.
இதன் காரணமா? அல்லது அன்றும் வியாபார வசதி லாபத்தின் அடிப்படையில் இருந்து முஸ்லிம் மக்களின் வியாபார நோக்கம் காரணமா? அல்லது தமிழர்கள் கோரிக்கையில் வருவதை அனுபவிக்கும் சமூகமாக இருப்பதே மேல் என்ற எண்ணமா? இவைகளும் புரியாத புதிரே!
எமது அனுபவத்தின் கடந்த கால சரித்திரம் நடந்தது, நடைபெற்றது, நடக்கப்போவது இதில் எதை எப்படி பார்த்தாலும் கோரிக்கை விடுபவர் தமிழினமாகவும் கொடுக்க விரும்பாதவர் சிங்களவராகவும், அழுத்தத்தின் பெயரில் கிடைப்பதை அனுபவிப்பவர்களாக முஸ்லிம் சமூகமாகவும் விபரிக்கின்றது.
இதற்கு உதாரணமாக நான் குறிப்பிட விரும்புவது இதைத்தான். திட்டத்தை தீட்டுபவன் அல்லது உற்பத்தியாக்க முயற்சிப்பவன் பலனை என்றும் அனுபவித்ததாக சரித்திரம் இல்லை.
ஆம் மகாத்மா காந்தி சாத்வீகமாக ஏற்படுத்திய மக்கள் எழுச்சியின் பலனை அவரால் அனுபவிக்க முடியவில்லை. இருக்கும் போது ஏற்பட்ட சுதந்திர தாகம், எண்ணம் வெற்றியடையும் போது அனுபவிக்காத துரதிஸ்டவாதியானவராகவே நான் பார்க்கின்றேன்.
அதன் தொடர்ச்சியாக பல அரசியல் உள்நோக்கம், எண்ணம், மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்று பார்க்கும் போது, சரித்திரத்தை உண்டு பண்ணியவர்கள் என்றுமே அதனை அனுபவிப்பதில்லை என்பது யதார்த்தம். அது அன்று உலகிற்கும் இன்று தமிழினத்திற்கும் உள்ள உண்மை.
அதே போல் தான் நாம் சிந்திக்க வேண்டிய முக்கிய விடயமாக போதையை எடுக்கலாம். நல்லதும் கெட்டதும் இணைந்த படியால் தான் நாணயத்திற்கு இரண்டு பக்கம் என்பது போல், ஒரு பக்கம் நல்லதும் மறுபக்கம் கெட்டதும் இரண்டும் அன்றும் இன்றும் ஏன் நாளையும் நடக்கப்போவதும், நடந்ததும், நடக்கின்றதும். ஆனால் எதுவும் மூன்றில் முடியும் இதுதான் உண்மை
இதை யார் குறிப்பிட்டார்கள் என்பதை பார்க்காமல் உண்மையை உணர வேண்டும் இந்த தமிழினம். ஆம் நான் குறிப்பிட்ட போதையை ஊசியின் மூலம் நுகர்வதின் மூலம் அனுபவிக்கலாம் என்பதற்கு சான்றாக இந்த மகாசிவராத்திரியை கொண்டாடும் இந்து மக்களுக்கு தெரிந்த விடயமே. சிவபெருமானின் சந்தேகம் கூந்தலில் வரும் மணம் இயற்கையா அல்லது செயற்கையா? என்ற வாதம் அதே போல் சுவைப்பதன் மூலம் மயக்கம், நுகர்வதின் மூலம் மயக்கம் என எடுத்துக் கொள்ள முடியும்,
நமது முன்னோர்கள் புகையிலை மூலம் சுருட்டு, கருப்பு இலை அனுபவித்ததை மாற்றம் செய்து பீடி,சிகரெட் என மதி மயக்கும். இது அனைத்துமே மயக்கமென்றால் நமது மூளையை செயற்படாமல் ஓர் இலக்கிற்கு கொண்டு செல்ல ஏற்படுத்தும் திட்டத்தை அல்லது சாதிப்பதை ஆங்கிலத்தில் brain wash என்று எடுத்துக்கொள்ளலாம்.
அதேபோல் நுகர்ந்து மதி மயக்கத்தை ஏற்படுத்த மூக்கு தூள். இதை நமது முன்னோர்கள் பாவிப்பார்கள், புகையிலையை வைத்து (சுருட்டு ) வசதியற்ற மக்களும் சுங்கானை வைத்து வசதி படைத்தவர்களும் நடுத்தர வகுப்பினர் மூக்கின் மூலம் போதையை ஏற்றிக்கொள்ளும் வசதிகளையும் கொண்டிருந்தார்கள்.
இதற்கெல்லாம் வியாபார நோக்கம் முக்கிய காரணமாகும். இதை முன்நின்று செயல் படுத்தியவர்கள் முஸ்லிம் வியாபாரிகளே. அதன் மூலம் அவர்கள், அவர்களின் குடுபத்திற்கும் சமூகத்திற்கு உதவுமுகமாக பள்ளிவாசல்களுக்கு உதவி செய்வதும் முக்கிய கடமையாக, பொறுப்பாக, சேவையாக செயல்படுத்தி அந்த வழியை இன்றும் இப்பொழுதும் செய்து தங்களின் செயல்பாடுகளுக்கு நியாயம் கற்பித்துக் கொண்டும் இருக்கின்றார்கள்.
இதற்கு முக்கிய காரணம் தற்காலிக செயல்பாடுள். இதை உண்மையான முஸ்லிம் மதவிரும்பிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும், இதன் மூலம் மதம், சமூகம் உரிமையை பெற்றுக்கொள்ள அவர்கள் தெரிவு செய்த வழியாகவும் ஏனைய மக்கள் குறிப்பாக தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வியாபார நோக்கம் எதை கூறும் விதத்தில் கூறி வாடிக்கையாளரை கவர்ந்து, அவர்களிடம் இருக்கும் பணத்தை பெற வேண்டும் என்பதே. (அதை இப்படியும் குறிப்பிடலாம்) நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அடைய வேண்டிய வழிகளில் இதுவும் ஒன்று. இதை தமிழினம் தப்பாக எடைப்போடக்கூடாது. ஆனால் நினைக்க வேண்டிய நிலையும் உண்டு.
ஆம் ஓர் வீட்டை கட்ட உழைப்பவர்கள் பல பேர். குடியிருப்பு ஒருவன் கட்டி முடிந்தவருக்கு திறப்பு விழாவிற்கு முன் சிறு அனுசரணை (உணவு,உடை அவனுக்கு வேண்டிய பொருட்களுடனான அன்பளிப்பு)
இது அன்றும் இன்றும் நாளையும் நடைபெற்ற, நடைபெறுகின்ற, பெறப் போகின்ற உண்மையாகும். இந்த அடிப்படையை நோக்கத்தை எண்ணத்தை மிக கவனமாக கடைப்பிடித்து நன்மையை அனுபவிக்கும் இந்த முஸ்லிம் சமூகமா அல்லது அவர்களை வைத்து அரசியல் நடத்தும் தலைமைகளா? என நாம் ஆராய்வதை விட உண்மையை யதார்த்தத்தை உணர வேண்டும்.
இன்றும் இலங்கை அரசியலில் பல எதிர்பாராத சம்பவங்களை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். ஆனால் அதன் பயன் யாருக்கு? சிங்களவர்கள் எதையும் கொடுக்க விரும்பாதவர்கள் ,தமிழினமோ உரிமையை பெறவேண்டும் என எண்ணுகின்றார்கள்.
முஸ்லிம் தலைமைகளோ அங்கும், இங்கும் மோதவிட்டு அதன் மூலம் பலனை அனுபவிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள். இதில் அவர்கள் செயற்படுத்துகின்ற விதமே முக்கியமாகதாகும்.
விச பாம்பு சாகக்கூடாது அதனை காட்டி பயத் தன்மையை ஏற்படுத்தி அதன் மூலம் இலாபத்தை பெற்றுக்கொண்டு இருப்பது மட்டுமல்லாது, அதற்கு நியாயமும் கற்பிக்கின்றார்கள்.
இதை இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். ஓர் இணையத்தளத்தில் இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், சம்பந்தன் ஐயா ஓர் ஆசிரியர் நான் சிஸ்யன் என்றும் அவரிடம் இன்னும் கற்க வேண்டியவைகள் எத்தனையோ இருக்கின்றது என்றும் கூறியிருக்கின்றார்.
இதுவே போதும் சம்பந்தனின் மதி மயக்கத்திற்கு அவரின் அனுபவம் முதிர்ச்சி அனுபவித்தது. இனி அனுபவிக்க என்ன வேண்டும், இனி வேண்டியது புகழ்ச்சியே. இதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நன்கு கற்றுக்கொண்டுவிட்டார்கள்.
அவர்களுக்கு நன்கு தெரியும் சில தமிழ் தலைமைகளுக்கு இது வேண்டும். சில தமிழ் தலைமைகளுக்கு அது வேண்டும். யாருக்கு எது வேண்டுமோ அதை அவர்கள் நட்டப்படாமல் இருக்கின்ற இடத்தில் இருந்து எடுத்து கொடுக்கும் மிக திறமையை கொண்டு இருக்கின்றவர்கள். அதை வைத்து எந்த தமிழ் அரசியல் தலைவனுக்கு எது வேண்டுமோ, அதை எடுத்துக் கொடுப்பதும் எதை சாதாரண தமிழ் மக்களுக்கு கொடுப்பதை தடுக்க வேண்டுமோ, அதை தடுக்க வேண்டுமோ அதை தடுத்து இதை கொடுக்கும் இடைத்தரகராக இருக்கின்றார்கள்.
இதன் மூலமே அரசு கொடுக்க நினைப்பதை தடுத்து அவர்களின் நம்பிக்கையை பெற்று தமிழ் இனத்தை தங்களது வியாபார சிந்தனை மூலம் தடுக்கும் யுக்தியை கொண்டு இருக்கின்றார்கள். இதன் மூலம் அவர்கள் நேற்றும், இன்றும் அனுபவிக்கும் பலனை தொடர்ந்து அனுபவிக்க தமிழினம் ஒத்துழைக்கப் போகின்றதா?
அல்லது இஸ்லாமிய அரசியல் தலைமைகளுக்கும் மக்களுக்கும் உண்மையை எடுத்துக்கூறி சகோதரத்துவத்தை ஏற்படுத்தப் போகின்றதா? என்பது கல்வியறிவின் மூலம் மக்களிடம் எடுத்து சென்ற உண்மையை யதார்த்தத்தை புரிய வைக்கவேண்டும்.
இதை யார் சொல்வது என்ற கேள்வி எல்லோருக்கும் ஏற்பட்டுக் கொண்டு இருக்கின்றது. இது பெரிய விடயமாக எடுக்காமல் தமிழ் இளைஞர்களை போதைக்கு எதிராக ஒன்று திரட்டுங்கள், கலாச்சார உடைகளை உடுத்தும் எண்ணத்தை ஏற்படுத்துங்கள்.
காணாமல் போனோர்களின் விடயங்களில் உறவுகளின் கண்ணீரை ஒன்றிணைக்கும் முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி, அரசியல் இலாபங்கள் காணாது நடவடிக்கைகளை எடுத்து முடிவை கொண்டுவாருங்கள்.
சர்வதேச நாடுகள் எம்மை நம்பும் எண்ணத்தை ஏற்படுத்துங்கள். சிறையில் வாடும் தமிழ் கைதிகளின் விடுதலைக்கு வித்திட்டு திட்டத்தை முன்னெடுங்கள். சமத்துவத்தை உணரவையுங்கள், தாய்மார்கள் போராட்டம் போல் தலைமைகள் போராடுங்கள்.
நம் மக்களின் கண்ணீர் போராட்டத்தின் ஓசையை சிங்கள முஸ்லிம் தலைமைகளின் இசைக்கு மாற்றாது, தலைமைகள் ஜனநாயக முறையில் போராட்டங்களை நடாத்துங்கள்.
கடிதம் எழுதிவிட்டோம் என்ற நொண்டி சமாதானம் தேவையில்லை. சாத்வீக போராட்டத்தை நடாத்த பாராளுமன்றம் மாகாண சபை, உள்ளூராட்சி சபைகளை பயன்படுத்துங்கள்.
அது சர்வதேச நாடுகளின் காதுகளில் ஒழிக்கட்டும் முஸ்லிம் அரசியல்வாதிகளை நம்பாது முஸ்லிம் மக்களை முடிந்தால் இணைந்து செயல்படுங்கள். இல்லையேல் நம் வழி தனி வழி என போராடுங்கள் முடிவு எதுவானலும் நீங்கள் அனுபவிக்க எண்ணாது தமிழ் சமூகம் அனுபவிக்க எண்ணி செயல்படுங்கள். இது பொது வேண்டுகோள்.
http://www.tamilwin.com/show-RUmtyCRUSUnq6F.html
Geen opmerkingen:
Een reactie posten