[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 04:05.15 PM GMT ]
கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை பிரதம நீதியரசரிடம் விடுத்துள்ளார்.
சட்டத்துக்கு புறம்பாகவே நாமல் ராஜபக்ச, சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
2010ம் ஆண்டு துஸார, இறுதி சட்டப் பரீட்சையை எழுதிய வேளையில் நாமல் ராஜபக்சவுக்கு தனியான குளிரூட்டப்பட்ட அறையில் வைத்து பரீட்சை நடத்தப்பட்டது. இது முழுமையாக சட்டமீறல் சம்பவமாகும்.
இந்தநிலையில் சட்டப்பரீட்சையின் வினாத்தாள்கள், நாமல் ராஜபக்சவுக்கு முன்கூட்;;டியே கிடைக்கப் பெற்றதாகவும் துஸார குற்றம் சுமத்தியுள்ளார்.
இதனையடுத்து நாமல் ராஜபக்ச அப்போதைய பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
அத்துடன் ஏனைய சட்டபீட மாணவர்களுக்கு வழங்கப்படாத வாய்ப்பான நீதிமன்றத்துக்குள் வைத்து புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டது.
இது தொடர்பில் தாம் முறையிட்டமையை அடுத்து தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக துஸார குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக தாம் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் துஸார சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjtz.html
பிரிட்டனுக்கு பயணமானார் வெளிவிவகார அமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 04:25.54 PM GMT ]
பிரிட்டனின் உயர் அதிகாரிகள் பலருடன் அமைச்சர் சமரவீர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
இதேவேளை, பிரிட்டன் விஜயத்தின் பின்னர் அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை இலங்கைக்கு அழைக்கும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjt0.html
இலங்கை இராணுவத்தின் வெளிநாட்டுப் பயிற்சி பெறுவது பற்றி பாதுகாப்பு அமைச்சர் கவனம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 08 பெப்ரவரி 2015, 04:32.22 PM GMT ]
தற்போது வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்று பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பில் ஆராய்ந்தார்.
திருகோணமலையிலுள்ள 22வது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் முப்படையினர் மத்தியில் உரையாற்றிய ருவான் விஜேவர்தன, உள்நாட்டில் தற்போதுள்ள பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க தான் தயார் இல்லை என்றார்.
மேற்குலக நாடுகளுடன் கட்டியெழுப்பப்படும் இராஜதந்திர உறவுகளைக் கொண்டு எதிர்காலத்தில் இலங்கை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ஐநா அமைதிகாக்கும் படையில் கூடுதல் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் அவர் தனது உரையில் வெளிப்படுத்தினார்.
சில நாடுகளில் இலங்கை பாதுகாப்பு பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிக்கான வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அந்தப் பிரச்சனைகளை நீக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பாதுகாப்புதுறை அமைச்சர் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டார்.
இதேவேளை சம்பூர் பிரதேச மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான பிரச்சனைகள் பற்றி உள்ளுர் செய்தியாளர்கள் கேட்டபோது, அது தொடர்பில் கருத்துக்களை தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சர் மறுத்து விட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTcKdjt1.html
Geen opmerkingen:
Een reactie posten