தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

கருணா, பிள்ளையான் போன்றோர்களை நம்பி ஏமாந்துள்ளீர்கள்: மட்டக்களப்பில் அ.சசிதரன் தெரிவிப்பு

ஹைபிரைட் வாகனங்களின் விலைகளை குறைக்கும் யோசனை ஆராயப்படவுள்ளது
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 04:51.23 PM GMT ]
இலங்கையில் ஹைபிரைட் வாகனங்களின் விலைகளை குறைக்கும் யோசனை தொடர்பில் தேசிய நிறைவேற்று சபை ஆராயவுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த யோசனை ஆராயப்படவுள்ளாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதியாளர்கள் பலர் நேற்று அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துரைத்தனர்.
இதன்போது ஹைபிரைட் வாகனங்களின் விலைகளை குறைத்தல் மற்றும் வருடாந்த அனுமதி கட்டணங்களை குறைத்தல் போன்ற யோசனைகளை இறக்குமதியாளர்கள் முன்வைத்தனர்.
இதன்போது கருத்துரைத்த அனுரகுமார,
வாகனங்களின் இறக்குமதி வரிகளை அதிகரித்தல் மற்றும் வருடாந்த அனுமதி பத்திரக் கட்டணங்களை அதிகரித்தல் என்பன முன்னர் கொள்வனவில் சந்தை கட்டுப்பாட்டை சிலர் கொண்டிருந்தமை போன்ற நிலையை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டார்.


கருணா, பிள்ளையான் போன்றோர்களை நம்பி ஏமாந்துள்ளீர்கள்: மட்டக்களப்பில் அ.சசிதரன் தெரிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 05:22.14 PM GMT ]
இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியது எந்தவொரு அரசியல்வாதியும் அல்ல மக்களாகிய நீங்கள் தான். நாங்கள் அல்ல. நாங்கள் வந்து கூறித்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று எந்தவொரு அரசியல்வாதியும் உரிமை கூற முடியாது என்று மட்டக்களப்பு மாவட்ட ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் அ.சசிதரன் தெரிவித்தார்.
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முருங்கைத் தீவு கிராம இளைஞர் அமைப்பு மற்றும் கல்குடா தொகுதி ஜக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஆ.ஜெகன் ஆகியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் நிகழ்வொன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற போது அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்!
கடந்த மகிந்த அரசாங்கம் அதிலிருந்த கருணா, பிள்ளையான் போன்றோர்களை நம்பி ஏமாந்தது மட்டுமல்லாது வாழ்க்கைத் தரத்தில் மிகவும் கீழ் மட்டத்திற்கு சென்றுள்ளீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்து உங்களை நம்பி உங்களுக்கு கை கொடுத்துள்ளீர்கள்.
சுய எண்ணத்துடனே தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களித்தீர்கள். கொடியவன் ஒருவனுடன் வாழ முடியாது நாளுக்கு நாள் நாங்கள் வறுமையான நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றோம் என்று கூறி ஒரு அரசியல் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
இவ்வாறு நீங்கள் செயற்பட்டமைக்கு நிச்சயமாக குறை ஏதும் ஏற்படாது. உங்களுக்குரிய அடிப்படை வாழ்வாதார உதவிகள் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும். தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தினை முடித்துக் கொண்டு பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ளமை நீங்கள் அறிந்ததே. அவ்வேளை ஆளும் கட்சிக்கு ஒரு பிரதி நிதியினை அனுப்புவதற்கு வழி அமைக்க வேண்டும். நீங்கள் காலம் காலமாக ஒரு கட்சிக்கே தொடர்சியாகவே வாக்களித்து வந்துள்ளீர்கள்.
இதனால் உங்களுக்கு ஏதும் பிரயோசனம் கிடைத்துள்ளதா, பின் தங்கிய கிராமங்கள் பல உள்ளன. அதில் பிரம்படித் தீவு, முருக்கன் தீவு, சாராவெளி ஆகிய கிராமங்கள் மிகவும் பின் தங்கிய கிராமமாகவுள்ளது.
இக் கிராமங்களுக்கான அடிப்படைத் தேவைகள் பல முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடப்பாடுள்ளது. எனவே நீங்கள் முன்வைத்த பல கோரிக்கைகளில் முதற்கட்டமாக தோணி மூலம் கிண்ணையடிக்கும், முருக்கன் தீவு கிராமத்திற்குமான ஆற்று வழி பயணத்தில் இடம்பெறும் இடர்களை தவிர்க்கும் முகமாக பாதை ஒன்றை குறித்த பிரதேசத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
மின்சார வசதியினை ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் பாதிக்கப்பட்ட ஆலயங்களுக்கான நிதி வசதியளிக்கும் திட்டத்தின் கீழ் முருக்கன் தீவு மற்றும் பிரம்படி தீவு ஆகிய கிராமங்களிலுள்ள ஆலயங்களுக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdeu0.html

Geen opmerkingen:

Een reactie posten