தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

18ம் திகதி பேரணி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கும் சூழ்ச்சி: ஜனாதிபதி



வீதியை புனரமைத்து தருமாறு கோரி வட்டவளை மக்கள் ஆர்ப்பாட்டம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:41.31 AM GMT ]
வட்டவளை நகரத்திலிருந்து 6 கிலோமீற்றர் தூரம் கொண்ட பாதை செப்பனிடப்படாமல் சுமார் 5 வருடங்களாக இழுபறியான நிலையில் உள்ளதனால் அப்பிரதேச மக்கள் இணைந்து வீதி மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

நோட்டன் மற்றும் வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அகரவத்தை, மீனாட்சி, கிளார்மெண்ட், லொனக், சமன்புர கிராமம் போன்ற தோட்டங்களுக்கு செல்லும் இப்பாதை குன்றும் குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகின்றன.
400 குடும்பங்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவ்வீதியை நாளாந்தம் பயன்படுத்துகின்றனர். இந்த பிரதான வீதி சேதமடைந்து இருப்பதனால் அதனை புனரமைத்து தருமாறு கோரி இன்று காலை இத்தோட்ட மக்கள் ஹற்றன் கொழும்பு பிரதான வீதி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் பல மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. பாதை மிகவும் மோசமாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் இரவு நேரங்களில் மிக கஷ்டத்திற்கும் மத்தியில் பயணம் செய்கின்றனர்.
அதேவேளை நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வட்டவளை போன்ற வைத்தியசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்படும் போது, நோயாளர்கள் உட்பட வாகன சாரதிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்வீதியை காலம் தாழ்த்தாமல் மிக விரைவில் புனரமைத்து தர அரசியல்வாதிகள் முன்வரவேண்டும் என இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்ததோடு, கினிகத்தேனை பிரதேச செயலாளருக்கு இவ்வீதியை புனரமைத்து தருமாறு கோரி மகஜர் ஒன்றும் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மக்களால் கையளிக்கப்பட்டுள்ளது. அதன் பின் ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKder3.html

தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மை கட்சிகளுக்கு பாதகமாக அமையக்கூடாது: ஜனாதிபதி உறுதி என்கிறார் மனோ கணேசன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:49.01 AM GMT ]
இன்றைய தேர்தல் முறைக்கு சீர்திருத்தம் எப்போது கொண்டுவரப்பட்டாலும், அது ஒருபோதும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகமாக அமைந்து விடக்கூடாது.
தேர்தல் மூலம் தங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு மறுக்கப்படும் போதுதான், சட்டவிரோத வன்முறை சார்ந்த வழிமுறைகளை நாடும் நிலைமைக்கு சிறுபான்மை பிரிவினர் தள்ளப்படுகிறார்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பில் தேசிய நிறைவேற்று சபை உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்ததாவது,
ஆம், இந்த கருத்தை ஜனாதிபதி மிகத்தெளிவாக தெரிவித்தார். "நூறு நாள் வேலைத்திட்டத்திற்குள் இன்றைய தேர்தல் முறை மாற்றப்படும் யோசனையும் உள்ளது.
இந்த காலவரையறைக்குள் அது நடைமுறை படுத்த முடியுமா என்ற ஒரு சிக்கலும் இருக்கிறது. எனினும் இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தாலும், அது சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகம் விளைவித்துவிடக்கூடாது" என்று ஜனாதிபதி சொன்னார்.
ஜனாதிபதி முறைமை மாற்றப்பட்டு, அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கு மாற்றப்படும் போது, தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது அரசாங்கத்தின் ஸ்திர தன்மையை சீர்குலைத்துவிடும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பிரதிநிதி நிசாந்த வர்ணசிங்க கூறிய கருத்தை அடுத்து ஏற்பட்ட வாதப்பிரதிவாதங்களின் போது, இடைமறித்த ஜனாதிபதி இவ்விதம் கூறினார்.
இன்றைய தேர்தல் முறை மாற்றப்பட்டு புதிய தேர்தல் முறை கொண்டு வரப்பட்டால், புதிய தேர்தல் தொகுதிகள் வரையறை செய்யப்பட வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே கடந்த கால தேர்தல் தொகுதிகளின் அடிப்படையிலேயே உத்தேசிக்கப்பட்டுள்ள தினேஷ் குணவர்த்தன குழுவின் புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவோம் என்று நந்தன குணதிலக்க கூறினார்.
பழைய தேர்தல் தொகுதிகளை அப்படியே ஏற்றுக்கொண்டு புதிய கலப்பு தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த சிறுபான்மை கட்சிகள் ஒருபோதும் உடன்பட முடியாது.
உண்மையில் நாங்கள் தினேஷ் குணவர்த்தன குழுவின் புதிய கலப்பு தேர்தல் முறை திட்டத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. அது இன்னமும் மாற்றப்பட வேண்டும்.
சிறுபான்மை பிரதிநிதித்துவங்களுக்கு முழுமையான உத்தரவாதம் இல்லாத எந்த ஒரு முறையும் தேசிய ஐக்கியத்துக்கு பாதகமானது என நான் இடைமறித்து கூறினேன்.
தினேஷ் குணவர்த்தன குழுவின் புதிய கலப்பு தேர்தல் முறை திட்டத்தை தாமும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய தேர்தல்முறை சிங்கள மக்களை பெருவாரியாக பிரதிநிதித்துவம் செய்யும் பெரிய கட்சிகளுக்கும், வடக்கில் வாழும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும் ஒருவேளை சாதகமாக அமையலாம்.
ஆனால், இந்நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களுக்கும், தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கும் புதிய தேர்தல்முறை மிகவும் பாதகமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் அப்போது தெரிவித்தார்.
"அப்படியானால் நாட்டின் ஸ்திரதன்மையை கருத்தில் கொண்டு, ஜனாதிபதியின் அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட முடியாத நிலைமை ஏற்படலாம்" என்று அப்போது இடைமறித்து கூறிய ஜனாதிபதி மேலும் "எது எப்படியிருந்தாலும், உத்தேச தேர்தல் முறை மாற்றம் ஒருபோதும் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கும், சிறு கட்சிகளுக்கும் பாதகம் விளைவித்துவிடக்கூடாது" என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKder4.html

18ம் திகதி பேரணி! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக்கும் சூழ்ச்சி: ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 09:56.22 AM GMT ]
மகிந்தவுடன் நாட்டை வெற்றி பெற ஆயத்தம் என்ற தலைப்பின் கீழ் எதிர்வரும் 18 ஆம் திகதி நுகேகொடையில் இடம் பெறவுள்ள பேரணிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் எவ்வித சம்பந்தமும் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த பேரணியானது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிரிக்கும் சூழ்ச்சி மற்றும் வேறு பல அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான முயற்சி எனவும் அதற்கு கலந்து கொள்ள வேண்டாம் என கட்சியினருக்கு அறிவித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKder6.html


Geen opmerkingen:

Een reactie posten