சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினுள் , மருத்துவத் துறைக்காக ஆரம்ப வைத்தியசாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்காக ரூ.2613 கோடி ஒதுக்குவதற்காக கெபினட் அனுமதியைப் பெற்றுக்கொள்ள கோதாபய ராஜபக்ஷ நேரடியாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த கெபினட் மனு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சமர்பிக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் விஷேட அம்சம்தான் இந்த மருத்துவத்துறைக்காக கனடா அதிகாரிகளினால் 8 பேர் வருடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுவதுடன் , 100 இற்கும் மேற்பட்டோரை பணம் செலுத்தி மருத்துவப் பட்டப்படிப்பை பெறும் திட்டமும் போடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் மாணவர்களும் இணைத்துக்கொள்ளப்படுகிறார்கள். இவர்களிடம் எவ்வளவு லட்சம் பணம் கறக்கப்பட்டுள்ளது என்பது தான் தெரியவில்லை.
2014ம் வருடத்திற்காக ரூ. 2338 கோடி உயர் கல்வி அமைச்சினால் இந்த பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்ததுடன் மருத்துவம், பொறியியல்,சட்டம்,பொது சுகாதாரம், முகாமைத்துவம் ஆகிய இளமாணிப் பட்டங்களை பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. இதில் உயர்கல்வி அமைச்சினால் மருத்துவத்துறைக்கு மட்டும் ஏனைய துறைகளை விட அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு இவர்கள் எத்தனை போலி டாக்டர்களை உருவாக்கி உள்ளார்களோ தெரியவில்லையே ?
http://www.athirvu.com/newsdetail/2261.html
Geen opmerkingen:
Een reactie posten