[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 01:44.08 AM GMT ]
இந்நிலையில் முதலீட்டுச்சபையினால் அனுமதிப்பெற்ற 2 ஆடை தொழிற்சாலைகள் கடந்த வருடங்களில் சுமார் 300க்கும் மேற்பட்ட கொள்கலன்களை வரி செலுத்தாது இறக்குமதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆடைகளின் இறுதி தயாரிப்புகளுக்காக, மூலப்பொருட்களான துணிகள், புதிய ஆடைகள் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பல மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விடயம் புலனாய்வுப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குற்றவாளிளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சிரேஷ்ட சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.
முதலீட்டு சபையினால் அனுமதிபெற்ற குருநாகலையில் அமைந்துள்ள இரண்டு ஆடைதொழிற்சாலைகள், இறக்குமதி செய்த ஆடைகளை மீண்டும் உரிய இடங்களுக்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றும் அந்த ஆடைகள் அனைத்தும் இலங்கையின் பல பிரதேசங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdno5.html
மஹிந்தவின் தோல்விக்கு வீரவன்சவும் ஞானசார தேரருமே பொறுப்பு: விஜயதாச ராஜபக்ச
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 01:54.17 AM GMT ]
எப்போதும் தோல்வியடையா அரசியல்வாதியாக நாட்டில் வலம் வந்த மஹிந்தவின் தோல்விக்கான பொறுப்பினை விமல் வீரவன்சவும்ää கலகொடத்தே ஞானசார தேரருமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தேர்தல் பிரச்சார மேடைகளில் விமல் வீரவன்ச கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த மக்கள் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவியில் அமர்த்தினார்கள்.
கலகொடத்தே ஞானசாரர் தொடர்பில் நாட்டு சிங்கள பௌத்த மக்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
எனினும் போதைப்பொருள் வர்த்தகம், எதனோல் சட்டவிரோத இறக்குமதி, ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட ராஜபக்ச அரசாங்கத்திற்கு வாக்களிக்குமாறு ஞானசார தேரர் கோரியிருந்தார்.
இவ்வாறு விடுத்த கோரிக்கையால் தேரருக்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக திரண்டனர் என, மஹரகம பிரதேசத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் சுதந்திரக் கட்சியினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன: மஹிந்தானந்த அலுத்கமகே
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 02:14.39 AM GMT ]
நவலப்பிட்டி கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து 100 நாள் திட்டத்திற்கு ஆதரவளித்தோம். எனினும் நாவலப்பிட்டி பிரதேசத்தில் கடுமையான பீதி நிலைமை நீடித்து வருகின்றது.
நாவலப்பிட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் தொடர்ச்சியாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றார்.
வீடுகள் உடைக்கப்படுகின்றன, கட்சியின் ஆதரவாளர்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் எரிக்கப்படுகின்றன.
தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்துள்ளோம் எனினும் இதுவரையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை என மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றது இன அழிப்பே: பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 03:09.09 AM GMT ]
இச்சந்திப்பில் உலக நாடுகளின் முக்கியஸ்தர்கள், பிரித்தானிய அமைச்சர்கள், 40க்கும் அதிகமான பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சித் தலைவர்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த Bassetlaw Nottinghamshire பகுதி பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் திரு. John Mann Labour MP, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகளுக்கு ஐ.நாவின் உதவியுடன் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மீது இரண்டாம் உலகப்போரை தொடர்ந்து இடம்பெற்றுவரும் இனப்படுகொலையானது கடந்த காலங்களில் அதிகரித்திருந்தது என குறிப்பிட்ட அவர், இதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன் சர்வதேச நாடுகள் இந்த விசாரணையை அக்கறையுடன் நடத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனவழிப்புக்கு நீதி கோரி சர்வதேசத்தின் ஆதரவை திரட்டும் வகையில் பிரித்தானிய தமிழர் பேரவை பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதனடிப்படையில் தனது ஆதரவை வெளிப்படுத்திய Wales ஒக்மோரே தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.Huw Irranca (Shadow Minister Environment, Food and Rural Affairs) 10 டவுனிங் வீதியில் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் வாசல்தலத்தில் மனுவொன்றை கையளித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதோடு இவ்விசாரணைகள் துரிதமாக இடம்பெற பிரித்தானிய பிரதமர் மற்றும் வெளிவிவகார செயலர் ஆகியோர் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
இன அழிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை தாம் தொடர்ந்தும் அழுத்தங்களை பிரயோகிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர், பிரித்தானிய பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்த மனு இவ்விசாரணைகளில் மேலும் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்த வழியமைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை பிரித்தானிய தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஹவ் இரான்சா டேவிஸ், பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தமிழ் மக்களுக்கான நீதி கேட்கும் பயணத்துக்கான சந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnp0.html
Geen opmerkingen:
Een reactie posten