மைத்திரி அரசுக்கு மேலும் அதிர்ச்சி: இறுதிப் போரில் நடந்தது இன அழிப்பே !
[ Feb 11, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 19695 ]
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றது இனப் படுகொலையே என வட மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் ஆற்றிய உணர்ச்சி மிகு உரையின் பின் அறுதிக் பெரும்பான்மை ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உள்ளது.
வட மாகாண சபையில் நேற்று(10) நடைபெற்ற அமர்வின்போது முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனால் முன்மொழியப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது. ஆளும் கட்சிகளுடன் இணைந்து எதிர்கட்சியினரும் இந்த தீர்மானத்திற்கான ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையில் இருந்து பாதுகாக்க சர்வதேச பொறிமுறை ஏற்படுத்துமாறு வேண்டுகோள் - என்ற தலைப்பில் கடந்த ஆண்டு மாகாண சபையில் பிரேரணை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த பிரேரணை வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் விசேட அறிக்கையும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு அதற்கு ஆதாரமான நீண்ட உரையை ஆங்கிலத்தில் வழங்கி முன்மொழியப்பட்டது. அதனைதொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 30 பேரும் எழுந்து நின்று வழிமொழிந்தனர். முதலமைச்சர் தனது உரையில் நடந்ததது இன அழிப்பு என்பதற்கான ஆதாரங்களை உள்ளடக்கியிருந்தார்.
http://www.athirvu.com/newsdetail/2241.htmlஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத ஆயுத உற்பத்திசாலைகள் காணப்படுகின்றன !
[ Feb 11, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 8305 ]
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சட்டவிரோத ஆயுத உற்பத்திசாலைகள் காணப்படுவதாக வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையின் சில பகுதிகளில் இவ்வாறான சட்டவிரோத ஆயுத உற்பத்திசாலைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.ஹம்பாந்தோட்டையின் பெலியத்த மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் காணப்படும் சட்டவிரோத ஆயுத உற்பத்தி சாலைகளில் துப்பாக்கிகள், கைக்குண்டுகள் போன்ற ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டவிரோத ஆயுத உற்பத்திசாலைகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரிடம் கோரியதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினரால் இந்த ஆயுதசாலை நடத்தப்பட்டு வருவதாக சஜித் பிரேமதாச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten