தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 2 februari 2015

தேசிய வைபவங்களில் மாணவர்களை ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது!- ஜனாதிபதி

நாளையும் மற்றும் நாளை மறுதினங்களில் மதுபான கடைகள் மூடப்படும்
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 01:00.16 AM GMT ]
பௌர்ணமி மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளையும் நாளை மறுதினமும் மதுபான கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சகல மதுபான கடைகளும் மூடப்பட உள்ளதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் வசந்த ஹபுவாரச்சி அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நாட்டின் சகல கலால் திணைக்கள பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விதிகளை மீறி விற்பனையில் ஈடுபடும் நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என வசந்த ஹபுவாரச்சி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdno3.html
தேசிய வைபவங்களில் மாணவர்களை ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது!- ஜனாதிபதி
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 01:08.16 AM GMT ]
சுதந்திர தின நிகழ்வில் பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்களை நிறுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
தான் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களை வீதிகளில், வெயில்களில் நிறுத்தி தன்னை வரவேற்பதை நிறுத்துமாறும், மாணவர்களைக் கஷ்டப்படுத்தி வழங்கப்படும் வரவேற்பு தனக்குத் தேவையில்லையென்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தேசிய தொலைக்காட்சிகளில் வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
சில தினங்களில் சுதந்திர தினம் நடைபெறவுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் அணிவகுப்புக்கள், பேரணிகள் எதற்கும் அனுமதி வழங்கப்படாது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் பணிப்புரை வழங்கியுள்ளேன்.
ஜயமங்கள கீதம் பாடுவதற்கும், தேசிய கீதம் பாடுவதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்படுவர். இதற்கு மேலதிகமாக எதற்கும் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தப்பட மாட்டார்கள். பாடசாலை மாணவர்கள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். நான் கலந்து கொள்ளும் எந்தவொரு நிகழ்வுகளிலும் பாடசாலை மாணவர்களை வீதியில், வெயிலில் நிறுத்திவைக்க வேண்டாம் என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது அரச தலைவர்களை வரவேற்பதற்கு பெருந்தொகையான பாடசாலை மாணவர்களை வீதியில் நிறுத்தியிருந்தனர்.
காலையில் வரும் சில மாணவர்கள் காலை உணவை உண்ணாமல் வரும்போது அவர்களுக்கு களைப்பு ஏற்படும். அதேநேரம் பெண் பிள்ளைகள் மலசல கூட வசதிகளின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்ததை நான் அறிவேன். எனவே பாடசாலை மாணவர்களைக் கஷ்டப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdno4.html

Geen opmerkingen:

Een reactie posten