உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்க மங்கள ஜெனீவா பயணமாக உள்ளார் !
[ Feb 20, 2015 04:12:13 PM | வாசித்தோர் : 2680 ]
ஜெனீவாவில் இடம்பெறவுள்ள உயர்மட்ட கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஜெனீவா நோக்கிச் செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தில் மார்ச் 2ம் திகதி இந்த உயர்மட்ட கூட்டம் இடம்பெறவுள்ளது. இந்த உயர்மட்ட கூட்டத்தில் 65 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்மட்ட கூட்டத்தின் பின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஷெயித் அல் ஹுஸைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை குறித்து தாக்கல் செய்யப்படவிருந்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய அறிக்கை தாக்கல் செய்வதை ஐ.நா மனித உரிமை ஆணையகம் பிற்போட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2341.html
கப்பம் பெறுவதற்காகவா 28 தமிழ் இளைஞர்கள் கொலை: திடுக்கிடும் தகவல் வெளியானது !
[ Feb 20, 2015 04:16:51 PM | வாசித்தோர் : 22560 ]
கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 28 தமிழ் இளைஞர்களை உயர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் ஒன்று படுகொலை செய்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இந்த உயர் கடற்படை அதிகாரிகள் குழுவில் முன்னாள் கடற்படைப் பேச்சாளர் ஒருவரும் உள்ளடங்குவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. கடத்தல்கள் மற்றும் கொலைகளுடன் தொடர்புடைய மூன்று உயர் கடற்படை அதிகாரிகளில் ஒருவர் தற்போது வெளிநாட்டில் பயிற்சி நெறியொன்றில் கலந்து கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
திருகோணமலை மற்றும் கொழும்பில் அமைந்துள்ள இரண்டு கடற்படை முகாம்களில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனவும், கப்பம் பெற்றுக் கொண்டதன் பின்னர் இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உயர் கடற்படை அதிகாரி ஒருவரின் காரியாலயத்தை சோதனையிட்ட போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் கடவுச்சீட்டுக்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் காணப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களே அதிகளவில் கடத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடற்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட கும்பல் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தி கொலை செய்தமை தொடர்பில் மிக முக்கியமான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட 28 பேரில் 11 பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான சகல விபரங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய உயர் கடற்படை அதிகாரிகளை காப்பாற்றும் முனைப்புக்களில் நீதித்துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.athirvu.com/newsdetail/2342.html
Geen opmerkingen:
Een reactie posten