தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

வெலிவேரிய சம்பவத்தில் பாதுகாப்பு தேடி தேவாலயத்திற்குள் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார்: ரணில்


அரசாங்கத்தின் நடவடிக்கைகள்: பொறுமையை இழந்துவிட்டதாக ஐ.தே.க தெரிவிப்பு
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 11:01.29 AM GMT ]
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நீந்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொழும்பு தெற்கு துறைமுக முனையம் திறக்கப்பட்ட போது இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை.
நாட்டின் முக்கிய வைபவம் ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்படாதது இதுவே முதல் முறையாகும். அதேவேளை வெலிவேரிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மறைக்க முடியாததால் அதனை சர்வதேச சூழ்ச்சி என கூறுகின்றனர்.
குடிக்க தண்ணீர் கேட்ட மக்கள் எப்படி சர்வதேச சூழ்ச்சியாளர்களாக மாறுவார்கள். அதேபோல் கிராண்ட்பாஸ் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சி பொறுமையை இழந்து விட்டது. எதிர்வரும் திங்கட் கிழமை முதல் ஐக்கிய தேசியக்கட்சி வீதியில் இறங்கும் என்றார்.
வெலிவேரிய சம்பவத்தில் பாதுகாப்பு தேடி தேவாலயத்திற்குள் இருந்த இளைஞர் கொலை செய்யப்பட்டார்: ரணில்
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 09:47.55 AM GMT ]
வெலிவேரிய சம்பவத்தின் போது பியகம சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிப்புரியும் இளைஞர் ஒருவர் தேவாலாயத்தில் பாதுகாப்பாக இருந்த பொழுது, பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் அந்த இளைஞரை துப்பாக்கியால் தாக்கி கொலை செய்துள்ளார் என ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவருமான அவர் கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி உலப்பனை பகுதியை சொந்த இடமாக கொண்ட இளைஞரே இவ்வாறு பலியாகினார். இந்த இளைஞர் வாழ்வாதாரத்தை தேடி பியகம பிரதேசத்திற்கு சென்று நிறுவனமொன்றில் காவலாளியாக வேலை செய்து வந்ததுடன், வெலிவேரிய பிரதேசத்திலேயே திருமணம் செய்து கொண்டார்.
கடந்த முதலாம் திகதி வெலிவேரியவில் ஒரு பிள்ளையுடன் வசிக்கும் தனது மனைவியின் வீட்டுக்கு செல்ல நேரிட்டது. முழு வெலிவேரிய பிரதேசமும் போர்க்களம் போல் காட்சியளித்தது.
இதனால் பேருந்து இடையில் நிறுத்தப்பட்டதும், அந்த இளைஞர் அருகில் உள்ள தேவாலயத்திற்குள் உயிரை காப்பற்றி கொள்ள ஓடியுள்ளார்.
அப்போது வீட்டில் உள்ள மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இளைஞர், வெலிவேரிய நகரம் போர்க்களம் போல் இருப்பதாகவும் தான் பாதுகாப்பு தேடி தேவாலயத்திற்குள் வந்துள்ளதாக கூறியுள்ளார்.
எனினும் அந்த இளைஞன் நினைத்தது போல் தேவாலயத்தில் பாதுகாப்பதாக இருக்க முடியாது போனதுடன் படையினர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்தார்.
அதேவேளை இந்த சம்பவத்தின் போது, தனது உயிரை பாதுகாத்து கொள்ள தேவாலயத்திற்குள் ஓடி ஒழிந்த 19 வயதான இளைஞர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவரது நிலைமை மிகவும் ஆபத்தாக உள்ளது. அந்த இளைஞரின் வயிற்றில் துப்பாக்கி தோட்டா பய்ந்துள்ளது. அதனை இலங்கையில் வைத்து அகற்றினால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இரண்டு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தனர். சாதாரண தரத்தில் படிக்கும் மாணவர் ஒருவர் பகுதி நேர வகுப்பு சென்று திரும்பும் வழியில் இராணுவம் நடத்திய தாக்குதலில் அவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது என்றார்.

Geen opmerkingen:

Een reactie posten