தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

தமிழர்களின் வாக்குகளை சிதைக்கும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ்: காரைநகர் பிரதேச சபை துணைத் தவிசாளர் குற்றச்சாட்டு


முன்னாள் வெளிவிவகார லக்ஷ்மன் கதிர்காமரின் சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 10:29.52 AM GMT ]
இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8வது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவச்சிலையை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று திறந்து வைத்தார்.
கொழும்பு ஹேர்ட்டன் பிளேசில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச தொடர்புகள் மற்றும் வழிமுறை கல்வி நிலையத்தில் இந்த உருவச்சிலை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் இலங்கை வெளிவிவகார அமைச்சின் இந்த சிலையை நிறுவதற்கான பணிகளை முன்னெடுத்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நாடுகளில் தடை செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு சார்பில் பெரும் பங்களிப்புகளை செய்த லக்ஷ்மன் கதிர்காமர், 2005 ஓகஸ்ட் 12 ஆம் திகதி விடுதலைப்புலிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தமிழர்களின் வாக்குகளை சிதைக்கும் நடவடிக்கையில் அமைச்சர் டக்ளஸ்: காரைநகர் பிரதேச சபை துணைத் தவிசாளர் குற்றச்சாட்டு
[ திங்கட்கிழமை, 12 ஓகஸ்ட் 2013, 09:13.20 AM GMT ]
தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து பேரினவாத அரசுக்கு தாரைவார்த்து அவர்களின் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் துணை போவதாக காரைநகர் பிரதேசசபை துணைத் தவிசாளர் சந்திரசேகரம் துர்க்கேஸ்வரன் குற்றஞ்சாட்டுகின்றார்.

நேற்றும் காரைநகர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமென்ற பெயரில் அமைச்சர் கலந்து கொண்ட முற்றுமுழுதான தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று காரைநகரில் நடத்தப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
காரைநகர் பிரதேச சபை தமிழ்க் கூட்டமைப்பு வசம் உள்ளபோதும் பிரதேச சபையினருக்கு இக்கூட்டத்துக்கான உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தொலைபேசியில் அறிவித்ததாக கூறுகிறார்கள். எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்பு மீளாய்வுக் கூட்டம் குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த மீளாய்வுக் கூட்டத்துக்கு அரச அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்ககள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அழைக்கப்படவில்லை.
இங்கு அபிவிருத்தி குறித்து கண்துடைப்பாகவே ஆராயப்பட்டது. முற்றுமுழுதாக அமைச்சரின் தேர்தல் பிரசார மேடையாகவே இந்த நிகழ்வு பயன்படுத்தப்பட்டது. அமைச்சரின் தேர்தல் பிரசாரங்களை நாம் முற்று முழுதாக ஒலிப்பதிவு செய்துள்ளோம். அதனை தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மீளாய்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் தேர்தல் ஆணையாளருக்கு முன்னரே முறைப்பாடு செய்திருந்தோம். அவர் அதனைக் கவனித்து நடவடிக்கை எடுப்பதாக எங்களிடம் தெரிவித்தார் எனவும் காரைநகர் பிரதேச சபை துணைத் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து பேரினவாத அரசுக்கு தாரைவார்த்து அவர்களின் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அமைச்சரின் செயற்பாடுகள் குறித்து மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.


Geen opmerkingen:

Een reactie posten