தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

வெலிவேரியவிற்கு செல்லுமாறு நானே படையினரிடம் கோரிக்கை விடுத்தேன்: ஞானசார தேரர்


நியாயமான முறையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை: கொஸ்கம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 02:21.50 AM GMT ]
நியாயமானதும், சுதந்திரமானதுமான முறையில் தேர்தலை நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இம்முறை மாகாணசபைத் தேர்தலின் போது அரசாங்கம் கௌரவமான முறையில் அரசியல் நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
நியாயமான முறையில் தேர்தலை நடாத்தி ஏனைய கட்சிகளக்கு முன்னுதாரணமாக திகழ உத்தேசித்துள்ளோம். 
வடக்கின் சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது. பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொண்டு, ஜனநயாகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எதிர்க்கட்சிகளின் போட்டிகள் எதுவுமில்லை, எனவே போட்டியின்றி வெற்றியீட்டக் கூடிய வாய்ப்ப காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கு இடமாற்ற உத்தரவு
கொஸ்கம பொலிஸ் நிலையத்தில் கடயைமாற்றிய உத்தியோகத்தர்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மகேஸ் பெரேராவினால் இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதேசத்தில் இடம்பெற்ற குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாமையே இதற்கான காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக யகடா என்னும் பாதாள உலகக் குழுத் தலைவரை கைது செய்யாது அவரிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
யகடயாவின் மனைவி கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை தடுத்து நிறுத்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணை நடாத்தி சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பதிலாக குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்று அவர்களுடன் நட்புறவாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொஸ்கம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைவரும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வெலிவேரியவிற்கு செல்லுமாறு நானே படையினரிடம் கோரிக்கை விடுத்தேன்: ஞானசார தேரர்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 02:06.23 AM GMT ]
தமது கோரிக்கைக்கு அமையவே பாதுகாப்பு படையினர் வெலிவேரிய போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்றதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சுத்தமான குடிநீரைக் கோரி வெலிவேரிய மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இந்தப் போராட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதனை அதாவனித்த நான், அது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவித்தேன்.
போராட்டம் கலகமாக வெடிக்கக் கூடும் என்ற அச்சத்தினால் நான் அவ்வாறு படையினருக்கு அறிவித்தேன்.
பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு படையினரிடம் கோரியிருந்தேன்.
குடிநீர்ப் பிரச்சினை அடிப்படையானது எனவும் அதற் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் படையினரிடம் கோரியிருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இடம்பெற்ற துர்ப்பாக்கிய நிலைமை வருத்தமளிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten