தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 5 augustus 2013

உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்!- ஆங்கில இணையம் !


மாகாணசபைகளுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படவுள்ளன!
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 12:39.07 AM GMT ]
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் இன்று அல்லது நாளை வழங்கப்படவுள்ளன. பதில் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் இதனை அறிவித்துள்ளார். 
இதன்படி வேட்பாளர் பெயர்களின் ஆங்கில அகர வரிசையின் பிரகாரம் விருப்பு இலக்கங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவை இன்று தேர்தல் நடைபெறவுள்ள 10 மாவட்டங்களில் உள்ள உதவி தேர்தல்கள் செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.
அவற்றை இன்று அல்லது நாளைய தினம் வேட்பாளர்கள் மாவட்ட உதவி தேர்தல் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்!- ஆங்கில இணையம்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 01:46.17 AM GMT ]
இலங்கையின் உயர்நீதிமன்றத்தை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக ஆங்கில செய்தி இணையம் ஒன்று தெரிவித்துள்ளது.
தற்போது பிரதம நீதியரசராக உள்ள மொஹான் பீரிஸ் முன்னர், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசராக செயற்பட்;டு வந்தார்.
இந்தநிலையில் அவரை பயன்படுத்தி கோத்தபாய ராஜபக்ச நீதித்துறையை குறிப்பாக உயர்நீதிமன்றத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகைப்பிடித்தல் நிறுவன வழக்கு ஒன்று அண்மையில் இடம்பெற்றபோது கோத்தபாயவின் ஆலோசனையின் பேரில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸே குறித்த நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணிகளை நியமித்துள்ளார்.
அத்துடன் அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளின் போது மொஹான் பீரிஸும் கோத்தபாய ராஜபக்சவும் சந்திப்புக்களை ஏற்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்தமை மற்றும் அதற்காக புதிய பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை நியமித்தமை என்பன கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்றதாக ஆங்கில இணையச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten