தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞரை யாழ் மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது!


பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட இளைஞர் ஒருவரை யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
உரும்பிராய் மேற்கை சேர்ந்த 30 வயதான சங்கரப்பிள்ளை பிரபாகரன் தமிழகன் என்ற இளைஞரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 2009 மே மாதம் 15ம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பு பிரதான நீதிமன்றில் அஜர்ப்படுத்தப்பட்டதை அத்து அவர், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு எதிராக வழக்கினை சட்டமா அதிபர் திணைக்களம் யாழ். மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
விடுதலை புலிகள் இயக்கத்தில் உறுப்பினராக இருந்த இவர், கடற்படை மீது தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் அவரால் வழங்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை யாழ். மேல் நீதிமன்றம் 2013ம் ஆண்டு யூலை மாதம் 18 ஆம் திகதி நிராகரித்தது.
அத்துடன், இவருக்கு எதிரான வேறு சாட்சியங்கள் உள்ளனவா என பரிசீலனை மேற்கொள்வதற்காக இந்த வழக்கு நேற்று வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மேற்படி வழக்கினை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், இவருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு வேறு சாட்சியங்கள் முன்வைக்காத காரணத்தினால் இளைஞரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் பிரதிவாதி சார்பாக சட்டத்தரணி முடியப்பு ரெமீடியஸ் ஆஜராகியிருந்தார்.

Geen opmerkingen:

Een reactie posten