தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 21 augustus 2013

பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக மெட்ராஸ் கபே! காங்கிரஸை காப்பாற்றவா மெட்ராஸ் கபே?

குடிநீர் கேட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஜனநாயக நாட்டில் நடக்க கூடாத சம்பவம்: சந்திரிகா
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 08:15.16 AM GMT ]
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேச மக்கள் குடிநீர் கோரி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜனநாயகத்திற்கு எதிரானது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
குடிநீர் கேட்ட மக்கள் மீது தாக்குதல் நடத்தி மூன்று பேரை கொலை செய்திருப்பது ஒரு ஜனநாயக நாட்டில் நடக்க கூடாத சம்பவம் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெலிவேரியில் நடத்த இராணுவ தாக்குதலில் கொல்லப்பட்ட அகில, ரவிஷான், நிஷாந்த ஆகியோருகான பூஜைகள் நேற்று ரத்துபஸ்வல கல்ஓய சம்புத்த ஜயந்த விகாரையில் நடைபெற்றது.
இதில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே சந்திரிகா இதனை கூறினார்.
பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக மெட்ராஸ் கபே! காங்கிரஸை காப்பாற்றவா மெட்ராஸ் கபே?
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 07:30.22 AM GMT ] [ விகடன் ]
'மெட்ராஸ் கஃபே� _ படம் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது!  ஈழத் தமிழ் மக்களுக்கு அமைதியையும் சமாதானத்தையும் வழங்க நினைக்கும் ராஜீவ் காந்தி, 
வடக்குக் கிழக்கு தேர்தலை அமைதியாக நடத்தவும் ஈழ மக்களுக்கு சமாதான சகவாழ்வை பரிசளிக்கவும் இலங்கை அரசோடு ஒப்பந்தம் செய்கிறார். அந்த ஒப்பந்தத்தை பாஸ்கரன் (பிரபாகரன்) எதிர்க்கிறார்.

எதிர்க்கும் பாஸ்கரனை சரிக்கட்ட, அல்லது தீர்த்துக்கட்ட விக்ரம் சிங் என்ற ரா உளவு அதிகாரி யாழ்ப்பாணம் செல்கிறார். அவருடன் பிரிட்டன் ஊடகவியலாளர் ஜெயாவும் (அனிதா பிரதாப்) செல்கிறார். ஜெயா, பாஸ்கரனைச் சந்தித்து நேர்காணல் எடுக்க, விக்ரமோ சிறியை (சிறி சபாரத்தினம்)  வைத்து பாஸ்கரனை முடிக்கத் திட்டமிடுகிறார் அதற்காக சிங்கப்பூரிலில் இருந்து ஆயுதங்களைக் கப்பலில் தருவித்து சிறிக்கு வழங்கத் திட்டமிடுகிறார். இன்னொரு பக்கம் மல்லையாவை (மாத்தையா) ராவின் கட்டுப்பாட்டின் கீழ்கொண்டு வரவும் முயற்சி நடக்கிறது. 

சிறிக்கு ஆயுதங்கள் கப்பலில் வந்து இறங்கும்போது உளவு அதிகாரி ஒருவராலேயே அந்தச் செய்தி புலிகளுக்குச் சொல்லப்பட்டு புலிகள் வந்து ஆயுதங்களைக் கைப்பற்றிச் செல்கிறார்கள். இறுதியில் மல்லையாவும் சிறியும் கொல்லப்படுகிறார்கள். ராவின் திட்டங்கள் தோல்வியடைய அடுத்து ராஜீவ் காந்தி பதவி இழக்க, அடுத்து வரும் பிரதமர் இந்தியப் படைகளை இலங்கையில் இருந்து வாபஸ் பெறுகிறார்.

அடுத்த தேர்தலுக்குத் தயாராகும் ராஜீவ் காந்தி தன் தேர்தல் பிரசாரத்தில், 'மீண்டும் தான் ஆட்சிக்கு வந்தால் இலங்கை தமிழர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பேன்� என அறிவிக்க, பாஸ்கரன் ராஜீவைக் கொல்லுமாறு கட்டளையிடுகிறார். அதை இடைமறித்துக் கேட்கும் ரா அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் வருவதற்கு முன்னால் ஹைதராபாதில் இருக்கும் ராஜீவ் காந்தியை தமிழகம் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். அதையும் மீறி வரும் ராஜீவ் காந்தி எல்.டி.எஃப். அமைப்பால் (புலிகள்)  கொல்லப்படுகிறார். 

லண்டன் பத்திரிகையாளர் ஜெயா மூலம் ராஜீவ் கொலை பற்றிய செய்தியை உறுதிபடுத்திக் கொள்ளும் விக்ரம்சிங் ராஜீவ் கொல்லப்பட்ட மேடைக்கு அருகில் செல்லும்போது குண்டு வெடிப்பதோடு படம் முடிவுக்கு வருகிறது.
ஈழத்தில் இருந்து ராஜீவைக் கொல்ல பாஸ்கரன் திட்டமிடுவதும் சிங்கப்பூரில் இருக்கும் மெட்ராஸ் கஃபேயில் அதற்கான திட்டங்கள் வகுக்கப்படுவதும் ஜெர்மனியில் இருந்து வரும் இன்ஜினீயர் ஒருவர் வெடிகுண்டை தயாரித்துக் கொடுப்பதாகவும் சொல்கிறது 'மெட்ராஸ் கஃபே�.
''அப்பட்டமாக ஈழத்தமிழர் பிரச்னையை குறிப்பாக விடுதலைப் புலிகளை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் சொல்லும் சம்பவம் எதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. ராஜீவ் கொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட மூன்று புலனாய்வு அமைப்புகளின் அறிக்கையிலும் சொல்லப்படாத சம்பவங்களை இதில் கற்பனையாக உருவாக்கி இருக்கிறார்கள். 

ராஜீவ் காந்தி மீது அனுதாபம் ஏற்படுத்தும் வகையிலேயே திரைக்கதையும் உருவாக்கப்பட்டிருப்பது பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் பிரபாகரன்மீது வெறுப்பு ஏற்படுத்தும் விதமாக கதை நகர்வதுதான் பிரச்னை.  ஒரு ஆயுதக் குழுக்கள் தமிழ் பேசும் பெண்களையும், குழந்தைகளையும் கொடூரமாகச் சுட்டுக் கொல்வதில் இருந்துதான் படம் துவங்குகிறது. 

ஒரு கட்டத்தில் உளவு அதிகாரியான விக்ரம் சிங்கின் இளம் மனைவியை கொச்சிக்கே வந்து கொலைசெய்கிறார்கள் புலிகள். படம் முழுக்க ஆயுதங்கள் மீது வெறி கொண்டவர்களாகவும் கொலைசெய்ய அஞ்சாதவர்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். 

போராளிகளின் தரப்பு நியாயங்கள் துளிகூட படத்தில் இல்லை. ராஜீவ் காந்தி மரணமடைந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்தப் படத்துக்கான தேவை இப்போது என்ன? என்பதுதான் எங்களது கேள்வி'' என்கிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்.
''வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பலை வீசும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு இந்தப் படம் ஓரளவு கைகொடுக்கலாம் என்பதற்காகவே இப்படி ஒரு படம் உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்கிறார்கள்.
இந்திய அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த ராஜீவ் காந்தியை சிங்கள ராணுவத்தைச் சேர்ந்தவர் பிடறியில் அடித்தது படத்தின் இயக்குனர் ஜான் ஆப்ரஹாமுக்கு தெரியவில்லை. படத்தின் காட்சிக்காக சிங்கள போர்விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை உற்றுக்கவனித்தால் இந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியும்!
 

Geen opmerkingen:

Een reactie posten