வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென்றால் அது அரசாங்கத்தின் தவறு: ரில்வின் சில்வா, தேர்தல் நமது நோக்கமல்ல: டளஸ்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 07:47.50 AM GMT ]
அந்த முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா கூறுகையில்,
ஈழத் தமிழர்கள் மூன்று பேரை தமிழகத்திலிருந்து நாடு கடத்தக் கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு மக்கள் பல வழிகளிலும் துன்பப்பட்டவர்கள், 30 வருடங்களாக அவர்கள் யுத்த சூழ்நிலையை எதிர்கொண்டார்கள், யுத்தம் நிறைவடைந்த மிகுதி 4 வருடங்களை அரசாங்கம் வெறுமனே போலி வார்த்தைகளால் விரயமாக்கியுள்ளது.
வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தற்போதைய அரசாங்கம் தீர்க்கவில்லை.
மக்களின் பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்திருக்குமானால், வடக்கு தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றிப்பெற முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.
கல்கமுவ பிரதேசத்தில் நேற்று மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே ரில்வின் சில்வா, இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இதேவேளை, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் போது, தேர்தலை இலக்காக கொண்டு முடிவெடுக்கவில்லை என்று அரசாங்கம் அறிவித்து வருகின்றது.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வின் போது உரையாற்றிய அமைச்சர் டளஸ் அழகபெரும,
மாற்றம் ஏற்படுத்த சில தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
தம்மீது பலர் குற்றச்சாட்டுகளை சுமத்தலாம், என்றாலும் மக்களின் நலன் கருதியே தாம் தீர்மானங்களை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தல்களின் வெற்றி பெறுவது அரசாங்கத்தின் இலக்கு அல்ல. எதிர்காலம் குறித்தே அரசாங்கம் தீர்மானத்தை மேற்கொள்கிறது என அமைச்சர் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
ஈழ அகதிகள் மூவரை நாடு கடத்தக் கூடாது: இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 21 ஓகஸ்ட் 2013, 09:04.11 AM GMT ]
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஈழத் தமிழர்கள் மூன்று பேரை தமிழகத்திலிருந்து வெளியேற்றி இலங்கைக்கு அனுப்பும்படி இந்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. செந்தூரன், ஈழ நேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் உடனடியாக நாடு கடத்தப் போவதாக தமிழக காவல்துறையைச் சார்ந்த கியூ பிரிவு பொலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இம்மூவரும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்து அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். இவர்கள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிரான குற்றச்சாட்டுகளோ வழக்குகளோ ஏதுமில்லை. ஈழத் தமிழர்களின் சனநாயக உரிமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து அறவழியில் அமைதி வழியில் உண்ணாநிலைப் போராட்டங்களை நடத்துவதால் காவல்துறை இவர்களை பொய்வழக்குகளில் கைது செய்வதுண்டு.
மற்றபடி கிரிமினல் வழக்குகள் ஏதும் அவர்கள் மீது இதுவரை பதிவானதில்லை. அரசியல்ரீதியான உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பதனாலேயே இவர்களை உளவுத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பதுண்டு.
ஈழத் தமிழர்களிடையே, குறிப்பாக அகதிகள் முகாம்களில் வாழும் தமிழ் மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஊட்டுவதும், அவர்களுக்கான உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைப்பதும்தான் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது. இதனாலேயே இவர்களுக்கு எதிரான சதி வேலைகளில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இதற்கு இந்திய அரசு மட்டுமின்றி தமிழக அரசும், குறிப்பாக காவல்துறையும் காரணமாகும்.
இம்மூவரையும் இந்திய அரசு நாடு கடத்தினால், கொழும்பு சென்று இறங்கியதும் சிங்கள இனவெறியாளர்களால் இவர்களுக்கு பெரும் ஆபத்து உள்ளது. இத்தகைய ஆபத்தான நிலை இருக்கிறது என்று அறிந்திருந்தும் இவர்களை நாடு கடத்த முடிவு செய்திருப்பது மிக வன்மையான கண்டனத்துக்குரியதும் மனிதநேயத்திற்கு எதிரானதுமாகும்.
குறிப்பிட்ட இந்த மூன்று பேரும் சட்டத்திற்கு விரோதமாகவோ தேசத்திற்கு விரோதமாகவோ செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர நாடு கடத்த முடிவு செய்வது அகதிகளுக்கான உரிமைகளை மீறுவதாகும்.
அதனாலேயே இந்திய அரசு சர்வதேச அகதிகள் உரிமைகளுக்கான ஐ.நா. ஒப்பந்தத்தில் நீண்ட நாள் கையெழுத்திடாமல் புறந்தள்ளி வருகிறது. அகதிகளின் உரிமைகளை நசுக்குவதற்கென்றே ஐ.நா. ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இந்திய அரசு அலட்சியப்படுத்துவதாகத் தெரிகிறது.
ஆகவே, உடனடியாக அகதிகளுக்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டுமென்று இந்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது. எந்தவிதக் குற்றச்செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி தமிழ் இளைஞர்கள் செந்தூரன், ஈழநேரு மற்றும் சவுந்தரராசன் ஆகிய மூவரையும் நாடு கடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டுமெனவும், இந்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. தமிழக அரசும் இம்முயற்சியைக் கைவிட வலியுறுத்தி இந்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten