தென்னிந்தியாவில் தாக்குதலை நடத்தும் பொருட்டு இலங்கையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தளங்களை கொண்டிருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது.
கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் 8 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் பயிற்சி பெறுவதாக மகாராஷ்டிர பொலிஸாருக்கு மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா தகவல் வெளியிட்டிருந்தது.
குறித்த தீவிரவாதிகள் 28 கிலோ மீற்றருக்கு அப்பால் யாழ்ப்பாணத்தில் பயிற்சி பெறுவதாகவும் அவர்களின் இலக்கு மயிலாடுதுறையாக இருக்கும் என்றும் மத்திய புலனாய்வுத்துறை எச்சரித்திருந்தது.
இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்று ஜெகத் ஜெயசூரிய குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten