இலங்கையில் எதிர்காலத்தில் ஏற்படப் போகின்ற சம்பவங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே வெலிவேரியாவின் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பார்க்கப்படுவதாக மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
வெலிவேரியாவில் குடிநீரில் இராசயன கலவை குறித்து மக்கள் நீண்டகாலமாக பிரச்சினை எழுப்பி வந்தனர். எனினும் அவர்கள் மீது இராணுவத்தை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இராணுவத்துக்கு பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த யார் உத்தரவிட்டது என்பது குறித்து அரசாங்கம் தகவல்களை வெளியிடவில்லை.
அதேநேரம் அவ்வாறு உத்தரவிடவில்லை என்றால், பொதுமக்கள் மீது தாக்குதலை நடத்திய படையினர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று சோபித்த தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே எதிர்காலத்தில் நிகழப் போகின்ற அநியாயங்களுக்கு வெலிவேரியா சம்பவம் கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது என்று தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அமைக்கப்படும் வரை நியாயமான தேர்தல் ஒன்றை எதிர்ப்பார்க்க முடியாது என்றும் அவர் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten