தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 14 augustus 2013

யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி அங்கஜன் அடாவடி! விசாரணைக்கு அழைப்பு

யாழ்.மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேடபாளராக போட்டியிடும் இராமநாதன் அங்கஜன் தேர்தல் விதிகளை மீறியுள்ளதாக பெப்ரல் அமைப்பு விசாரணைக்காக அழைத்துள்ளது.
தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி யாழில் வெளிவரும் பத்திரிகைளில் விளம்பரம் பிரசுரித்துள்ளதாக பெப்ரல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளதுடன், விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரி இன்று செவ்வாய்கிழமை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
தேர்தல் சட்ட விதிகளைக் கடைப்பிடிக்க தவறியமையினாலும், தேர்தல் ஆணையாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை உதாசீனம் செய்துள்ளதுடன், யாழில் வீதிக்கு வீதி நீல நிற சுவரொட்டிகளைக் காட்சிப்படுத்தியதுடன்
பத்திரிகைகளில் ஜனாதிபதியின் புகைப்படத்துடன் தேர்தல் விளம்பரங்களைப் பிரசுரித்தமைக்காக அங்கஜன் மீது பெப்ரல் அமைப்பு குற்றம் சாட்டி விசாரணைக்கு அமைப்பு விடுத்துள்ளது.
யாழில் அமைச்சர் ஒருவருக்கு அடுத்ததாக அடிதடிக் கலாச்சார அரசியலில் குறிதத் அங்கஜன். தற்போது சுவரொட்டிக்கு போஸ் கொடுக்கும் அரசியல் நடத்துவதாக அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten