தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

மக்களுக்காகப் போராடினேன்! இன்று எனது உயிருக்கு ஆபத்து! நான் மரணத்துக்கு பயந்தவன் அல்ல! வெலிவேரிய தேரர்


ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நளின் பண்டார இன்று பதவிப்பிரமாணம்! - மைத்திரி குணரட்ன சுயாதீன உறுப்பினராக செயற்பட தீ்ர்மானம்!
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 08:38.08 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினராக நளின் பண்டார இன்று சபாநாயகர் ஷமல் ராஜபக்ச முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன் உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக நளின் பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட இவர் அடுத்தப்படியாக அதிக விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார்.
அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தயாசிறி ஜயசேகர எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன சுயாதீன உறுப்பினராக செயற்பட தீ்ர்மானம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தென் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான மைத்திரி குணரட்ன, மாகாண சபையின் சுயாதீனமான உறுப்பினராக செயற்படுவது என தீர்மானித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபையில் தனித்து சுயாதீனமாக இயங்கினாலும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை.
அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பொறுப்புகளை ஏற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணைகளை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது.
இது பற்றி நான் எப்போதும், கூறி வருகின்றேன்.ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்துடன் உடன்பாடு ஒன்றை ஏற்படுத்தி கொண்டவர் போலவே செயற்பட்டு வருகிறார். உண்மையும் அதுதான்.
இந்த நிலையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தென் மாகாண சபையில் தனித்து சுயாதீன உறுப்பினராக செயற்பட போகிறேன் என்றார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஷிரால் லக்திலக தனித்து சுயாதீனமாக இயங்க ஏற்கனவே தீர்மானித்துள்ளமை குறிப்பிடதக்கது.
மக்களுக்காகப் போராடினேன்! இன்று எனது உயிருக்கு ஆபத்து! நான் மரணத்துக்கு பயந்தவன் அல்ல! வெலிவேரிய தேரர்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 04:13.16 AM GMT ]
குடிநீர் கேட்ட எமது மக்களுக்காக நான் தலைமை தாங்கி போராட்டங்களை முன்னெடுத்தேன். அதனாலேயே இன்று எனது உயிருக்கு ஆபத்துள்ளது. பல தரப்புக்கள் ஊடாக அதனை எச்சரித்து வருகின்றனர் என்று வெலிவேரிய ரத்துபஸ்வல விகாரையின் விகாராதிபதி பண்டித சிறிதம்ம தேரர் தெரிவித்தார். 
கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பதாக நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,
குடிநீர் கேட்ட மக்களை மிகவும் மோசமான முறையில் தாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வார்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை.
ஆனால், நீதிக்காகத் தொடர்ந்தும் போராடுவோம். இன்று எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
சுத்தமான குடிநீரை பெற்றுத்தருமாறு கூறி அரசாங்கத்தை வலியுறுத்தி வந்தோம். ஆனால், இன்று அமைதியாக கோரிக்கைகளை முன்வைத்து போராடிய பொது மக்களை மிகவும் மோசமாகத் தாக்கியுள்ளது.
அதேபோன்று, அரசபடைகளால் எனது மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், இதுவரையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக, அத் தொழிற்சாலைக்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மரணித்த வெலிவேரிய மக்களின் உயிர்களின் ஆத்ம சாந்திக்காக நாம் தொடர்ந்தும் எமது உரிமைகளுக்காகப் போராடுவோம்.
தற்போது தாங்கிகளில் நீர் வழங்கப்படுகின்றது. ஆனால், அது போதுமானதல்ல.
எமது மக்களுக்காக நான் தலைமைதாங்கி போராட்டங்களை முன்னெடுத்தேன். அதனாலேயே இன்று எனது உயிருக்கு ஆபத்துள்ளது.
பல தரப்புக்கள் ஊடாக அதனை எச்சரித்து வருகின்றனர். ஆனால், நான் மரணத்துக்குப் பயந்தவன் அல்ல என்றும் அவர் கூறினார்.

Geen opmerkingen:

Een reactie posten