[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 08:07.11 AM GMT ]
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமருக்கு சொந்தமான யாழில் உள்ள காணியை அரசாங்கம் சுவிகரிப்பதை நிறுத்தி விட்டு, அதற்கு உரித்தாளரான அவரது மகன் ஜெபரட்ணம் கிறிஸ்டியன் கதிர்காமருக்கு வழங்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சாம்பானி பத்மகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் உட்பட பிரதிநிதிகள் எழுத்து மூலம் காணி அமைச்சரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
ஐந்து புலி ஆதரவாளர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக திவயின பத்திரிகை குற்றம் சுமத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் மட்டுமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீர்த்திமிகு உறுப்பினரான கதிர்காமர் 2005 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கதிர்காமருக்கு சொந்தமான காணியை அரசாங்கம் சுவிகரிக்க உள்ளமை தொடர்பில் அவரது மகன் கிறிஸ்டியன் கதிர்காமர், தமது சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக காணி அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது.
லக்ஷ்மன் கதிர்காமர் இலங்கையின் பயங்கரவாதத்தை முயறிடிப்பதற்காக மட்டுமின்றி, இலங்கையின் நற்பெயரை உலகம் முழுக்க கொண்டு செல்ல முயற்சித்ததை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றும் மறக்க முடியாது.
லக்ஷ்மன் கதிர்காமர் நாட்டிற்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் செய்த சேவையை மதித்து, அரசாங்கம் சுவிகரிக்க திட்டமிட்டுள்ள குறித்த காணியின் சட்டரீதியான உரிமையை அவரது மகனுக்கு வழங்க வேண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐந்து புலி ஆதரவாளர்கள் தேர்தலில் போட்டி!– திவயின
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 02:42.13 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நேரடித் தொடர்புகளைப் பேணிய ஐந்து பேர் இவ்வாறு தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரே இவ்வாறு புலி உறுப்பினர்களை அரசியலில் களமிறக்கியுள்ளார்.
குறித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதி புலிகளின் சிரேஸ்ட தளபதிகளில் ஒருவரான தீபனின் நெருங்கிய உறவினர் என திவயின சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தியும் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten