தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 3 augustus 2013

குடிக்கத் தண்ணீர் கேட்ட மக்களுக்கு ராஜபக்ச அரசு துப்பாக்கித் தோட்டாக்களை வழங்கியுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க!

நியூஸிலாந்து பால்மாவில் பாக்டீரியா கலப்படம்: அரசாங்கம் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 11:48.43 AM GMT ] [ பி.பி.சி ]
நியுஸிலாந்தின் மிகப் பெரிய பால்மா நிறுவனத்தின் குழந்தைப் பால் மா உள்ளிட்ட பொருட்களில் பாட்டுலிஸம் என்ற நோயைத் தரவல்ல பாக்டீரியா கிருமி கலந்திருக்கலாம் என அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது.
பாட்டுலிஸம் என்பது சில நேரம் உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்ல ஒருவகை வாத நோய்.
பாதிப்புள்ள பால்மா பொருட்களை கடைகளில் இருந்து உடனடியாக திரும்பப் பெற சீனா உத்தரவிட்டுள்ளது.
நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது தீவிர பரிசோதனைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம், சௌதி அரேபியா உட்பட பல வெளிநாடுகளிலும் தமது வாடிக்கையாளர்களுக்கு தகவல் கொடுத்துள்ளதாக நியுஸிலாந்தின் முன்னணி பால் உற்பத்திப் பொருட்கள் நிறுவனமான ஃபோன்டெர்ரா கூறுகிறது.
சீனாவில் குழந்தைகள் பால்மா ஒன்றில் மெலமின் கலப்படம் ஏற்பட்டு 2008ல் பிள்ளைகள் 6 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கு சீன நுகர்வோர் மாறியிருந்தனர்.
நியுஸிலாந்திலிருந்து பால்மா இறக்குமதி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

குடிக்கத் தண்ணீர் கேட்ட மக்களுக்கு ராஜபக்ச அரசு துப்பாக்கித் தோட்டாக்களை வழங்கியுள்ளது: திஸ்ஸ அத்தநாயக்க
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 11:10.24 AM GMT ]
குடிப்பதற்கு குடிநீர் கேட்ட அப்பாவி மக்களுக்கு மனசாட்சியின்றி துப்பாக்கி தோட்டக்களை பதிலாக வழங்கிய ராஜபக்ஷ ரெஜிமென்ட், உலகில் இதுவரை ஆட்சிக்கு வராத மிகவும் கேவலமான, காட்டுமிராண்டித்தனமான அரசாங்கம் என்பதை தனது செயலில் நிரூபித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரத்துபஸ்வல ம்ககளின் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் பதில் வழங்கிய விதத்தை ஐக்கிய தேசியக் கட்சி அருவக்கதக்கதாக கருதி வன்மையாக கண்டிக்கின்றது. அத்துடன் மனிதாபிமானத்தை மதிக்கும் உலகில் உள்ள அனைவரும் இதனை கண்டிக்க வேண்டும்.
இந்த சம்பவத்தின் போது இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில், அருகில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவர் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
தண்ணீரை கேட்ட மக்களுக்கு ராஜபக்ஷ ரெஜிமன்ட் இராணுவத்தை கொண்டு சட்டவிரோதமாக தாம் நினைத்தவாறு துப்பாக்கி வேட்டுக்களால் பதில் வழங்கியிருப்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு, மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேரில் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடவியலாளர்களுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten