கிழக்கு பல்கலையின் சௌக்கிய பீடத்தின் பீடாதிபதியாக டாக்டர் சுந்தரேசன் நியமனம்- யானையின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 02:33.48 AM GMT ]
கடந்த 28ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்தன.
டொக்டர் தட்சணாமூர்த்தி சுந்தரேசன் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவராவார். களனி பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தில் மருத்துவக் கற்கையை நிறைவு செய்த இவர், 199களில் ராகம வைத்தியசாலையில் தனது பயிற்சிகளை நிறைவு செய்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில், நரம்பியல் பிரிவில் வைத்தியராக 2000களில் இணைந்து கொண்டார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிறு நீரக மாற்றுப்பிரிவில், இலங்கையில் சிறுநீரக நோய் தொடர்பான பிரபல வைத்திய நிபுணரான பேராசிரியர் றிஸ்வி செரிப்ன் கீழ் அவரது பட்ட மேற்கற்கையை மேற்கொண்டார். பின்னர் மேற்படிப்புக்கான அவுஸ்திரேலியாவில், பொது வைத்தியத்துறையில் கற்று அக்கற்கைக்காக தங்கப்பதக்கம் வென்றவராவார்.
2008ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் பொது வைத்தியராக கடமையாற்றும் டாக்டர் தட்சணாமூர்த்தி சுந்தரேசன் 2008ஆம் ஆண்டு பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றி, 2010ஆம் ஆண்டு முதல் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சௌக்கிய பராமரிப்பு பீடத்தின் கிளினிக்கல் பிரிவின் இணைப்பாளராகவும், 2011ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பிரிவுக்கு பதில் தலைவராகவும் கடமையாற்றினார்.
வைத்திய நிபுணரான சுந்தரேசன் வைத்தியத்துறைசார் பல்வேறு கற்கைகளையும் மேற்கொண்டுள்ளதுடன், பலவேறு பதவிகளிலும் வகித்து வருகிறார்.
இவர், கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் விவசாயபீட பீடாதிபதி பேராசிரியர் குமாரசாமி தட்சணாமூர்த்தியின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் குமாரசாமி தட்சணாமூர்த்தி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
யானையின் தாக்குதலை தடுக்க நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக நிலவிவரும் யானையின் தாக்குதலை தடுக்கும் வகையில் 300 கிலோமீற்றர் நீளமாக மின் வேலிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலத்தில் அதிகரித்துச் செல்லும் யானையின் தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் உயர் மட்ட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட அரசாங்க அதிபர் வாமதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரத்நாயக்க, பிரதிப்பணிப்பாளர் தௌபீக் மற்றும் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள், மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் அண்மைக்காலமாக யானையின் தாக்குதல்கள் காரணமாக உயிரிழப்புகள், சொத்து இழப்புகள், விவசாய பண்ணைகள் அழிவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தசூழ் நிலை காரணமாக இடம்பெயர்ந்து மக்கள் சுமார் 25 வருடமாக வேறு இடங்களில் வாழ்ந்தபோது அந்த இடங்களை யானைகள் வாழ்விடமாக கொண்டன.
பின்னர் அப்பகுதிகளில் பொதுமக்கள் குடியேறியபோது யானையின் தாக்குதல்கள் அதிகரித்தது. இது தொடர்பில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அம்பாறை மற்றும் திருகோணமலை, பொலநறுவை ஆகியவற்றில் தேசிய வன பாதுப்பு பகுதிகளில் இருந்து யானைகள் மட்டக்களப்பு எல்லைப் பகுதிகளுக்குள் புகுந்து தாக்குகின்றன.
வரட்சி மற்றும் மழைகாலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிக்குள் இந்த தாக்குதல்களை யானைகள் ஏற்படுத்துகின்றது.
யானைகளுக்கான வழிப்பாதைகள் அடைபட்டுள்ள நிலையிலேயே இந்த நிலையேற்படுகின்றது. யானைகள் உட்புகும் பகுதிகளில் சில இடங்களில் மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை விட்டுவிட்டு அமைக்கப்பட்டுள்ளதால் அவை வெற்றிபெறவில்லை.மின் வேலியை அம்பாறை தொடக்கம் வடமுனை வரையில் தொடராக அமைப்பதன் மூலமே யானையின் தாக்குதலை தடுக்கலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானையின் தாக்குதலை தடுக்கும் வகையில் 300 கிலோமீற்றர் தூரத்துக்கு மின் வேலி அமைப்பதன் மூலமே யானையின் தாக்குதலை தடுக்கமுடியும்.
ஒரு கிலோமீற்றர் வேலி அமைப்பதற்கு ஐந்து இலட்சம் ரூபா செலவு ஏற்படும் 300 கிலோமீற்றருக்கு 1500 மில்லியன் ரூபா செலவு ஏற்படும்.இதனை அமைப்பதன் மூலமே யானை தாக்குதலை தடுக்கலாம்.
அத்துடன் யானைகள் பயனிக்கும் பாதைகளை சரியான முறையில் அமைப்பதன் மூலம் அவை மக்கள் குடியிருப்புகளை நோக்கி செல்வதை தடுக்கும் எனத் தெரிவித்தார்.
துப்பாக்கிப் பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஐ.தே.க உறுப்பினரும் அவரது மகனும் கைது
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 02:53.53 AM GMT ]
களுத்துறை பிரதேச சபையின் உறுப்பினர் காமினி கவிரத்ன மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவருமே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Geen opmerkingen:
Een reactie posten