வடமேல் மாகாணத்தில் பாரியளவில் தேர்தல் மோசடிகள் இடம்பெறலாம்! அனைத்துக் கட்சிகளும் தேர்தல் விதிகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 03:11.54 AM GMT ]
கடந்த காலங்களை விடவும் இம்முறை வடமேல் மாகாணசபைத் தேர்தலின் போது பாரியளவில் மோசடிகளும் மோதல்களும் இடம்பெறக் கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கட்டுப்படுத்தாவிட்டால் பாரிய பிரச்சினை ஏற்படும் என அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாகனத் இலக்கத் தகடற்ற வாகனங்களில் இப்போதே ஆயுததாரிகள் முக்கிய நகரங்களில் சஞ்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.
பொலிஸ் உத்தியோகத்தர்களும் தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இவ்வாறு ஆயுதங்களுடன் சஞ்சரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் தேர்தல் சட்ட விதிகளைப் பின்பற்றுமாறு கோரிக்கை
வடக்கு மாகாணசபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் வருகை தரவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தல் சட்ட விதிகளைப் பின்பற்றுமாக வடக்கு மாகாண பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.அச்சுதன் தெரிவித்துள்ளார்.
சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்கள், பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்கள், ஆசிய தேர்தல்கள் அதிகாரிகள் ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் என மூன்று சர்வதேச தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் வடக்கு தேர்தலை கண்காணிக்கவுள்ளன.
எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் தேர்தல் விதிமுறைகளையும், சட்டவிதிகளையும் ஒழுங்காக பின்பற்றுமாறு வடக்கு தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கேட்டுள்ளார்.
வடக்கில் 5மாவட்டங்களிலும் இதுவரை தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் எவையும் நடைபெற்றிருக்கவில்லை. எனினும் தேர்தல் வன்முறைச் சம்பங்கள் தொடர்பில் முறையிடுவதற்காக அந்தந்த மாவட்டச் செயலகங்களில் முறைப்பாட்டு அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
விரைவில் அந்த முறைப்பாட்டு அலுவலகங்கள் பிரதேச மட்டங்களிலும் உருவாக்கப்படும். எனவே தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இம்முறை முறையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதேபோன்று க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்கள் மாணவர்களை எவ்வகையிலும் அசௌகரியத்திற்குள்ளாக்கக் கூடாது. மேலும் உலகப் புகழ்பெற்ற நல்லூர்
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது.
அதில் உள்நாட்டவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டவர்களும் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். எனவே அவர்களையும் எவ்வகையிலும் அசௌகரியத்திற்குள்ளாக்க கூடாது.
எனவே இம்முறை வடக்கு மாகாணசபை தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற வேண்டும். அதற்குச் சகல கட்சிகளினதும், சுயேட்சை குழுக்களினதும் வேட்பாளர்களது ஆதரவு கோரப்படுகின்றது. என மேற்குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வெலிவேரிய சம்பவம் துரதிஸ்டவசமானது, வருந்தத்தக்கது!- டலஸ்! - முன்னாள் படையதிகாரியின் கொள்ளைக்கும்பல் கைது
[ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 03:06.56 AM GMT ]
வெலிவேரிய பிரதேசத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் ஏற்கனவே தீர்வுத் திட்டங்களை முன்வைத்துள்ளனர்.
சில அரசியல்வாதிகள் வேண்டுமென்றே இவ்வாறு மக்களை போராட்டங்களை களமிறக்கியுள்ளனர்.
வெலிவேரிய, ரத்துபலஸ்வல மக்களைப் பயன்படுத்தி சிலர் கட்சி அரசியலை மேற்கொள்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உன்னிப்பாக கண்காணித்தால் இது ஓர் சூழ்ச்சித் திட்டம் என்பது அம்பலமாகும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் படையதிகாரியின் கொள்ளைக் கூட்டம் கைது
முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவரினால் வழி நடத்தப்பட்ட கொள்ளைக் கூட்டமொன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்,
இந்தக் கொள்ளைக் கூட்டத்தில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பதுளை, அதெம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்கச் சங்கிலி ஒன்றை கொள்ளையிட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்து விசாரணை செய்த போது, கொள்ளைக் கூட்டம் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் பசறை தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைத்துப்பாக்கி, கைக்குண்டு உள்ளிட்ட ஆயுதங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten