தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

தமிழர்கள் தொடர்ந்தும் ஏமாறக் கூடாது: சி.சந்திரகாந்தன்


தமிழர்கள் இனிவரும் காலங்களில் நேர்த்தியான பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு குறுமன்வெளி சிவசக்தி வித்தியாலயத்தின் ஆயிரம் பாடசாலைகள் மகிந்தோதய திட்டத்தின் ஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாம், கல்வியமைச்சர் விமலவீர திசநாயக்க, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, கி.துரைராசசிங்கம், இ.பிரசன்னா, இரா.துரைரெட்ணம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சி.சந்திரகாந்தன்,
1976 வட்டுக்கோட்டை தமிழ் ஈழ பிரகடனத்தினை செய்யும்போது தமிழ் ஈழம்தான் ஓரே தீர்வு என குறிப்பிட்ட தமிழ் தலைமைகள் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கோடிக்கணக்கான உடமைகள் இழந்த பின்னர் தமிழ் ஈழம், சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு என்று கூறியவர்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஒற்றுமைக்கு ஆணையைத் தாருங்கள் சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது என்று கூறி கிழக்கு மாகாணசபை அதிகாரங்களையும் இல்லாமல் செய்துவிட்டு எதிர்க்கட்சியில் குந்திக் கொண்டிருக்கின்றார்கள்.
1978 ம் வருடம் மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியால் பாதிக்கப்பட்டு மக்கள் நிலைகுலைந்த வேளையில் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக மட்டக்களப்பில் பிரேமதாசா கலந்துரையாடல் நடத்தியபோது அபிவிருத்திக்காகவே சொல்லின் செல்வர் அமைச்சர் ராஜாதுரை கலந்து கொண்டார்.
இக் கூட்டத்தில் ஏன் கலந்து கொண்டீர்கள் என்று ராஜதுரை அவர்களுக்கு தமிழ் அரசிக் கட்சியின் செயலாளர் அன்று விளக்கம் கோரி கடிதம் அனுப்பி இருந்தார். இதுவே பின்னாளில் இராஜதுரை அவர்கள் கட்சியை விட்டு செல்வதற்கு காரணமாக அமைந்தது.
தொடர்ந்து தமிழ் மக்கள் ஏமாளிகளாக இருக்கும்வரை அரசியல் தலைமைகள் தொடர்ந்து எம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள். நாங்கள் இனிவருகின்ற காலங்களில் சரியான வழியில் சிந்தித்து தமிழ் மக்கள் நேர்த்தியான பாதையை தோர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான காலம் தற்போது கனிந்துள்ளது.
தொடர்ந்து இனிவருகின்ற காலங்களில் கிழக்கு தமிழ் மக்கள் உண்மையான சிந்தனையாளர்களாக மாறி சரியான தமக்கான உண்மை அரசியல் பாதையை தேர்ந்தெடுக்க உறுதி பூண வேண்டும் என குறிப்பிட்டார்.


Geen opmerkingen:

Een reactie posten