சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முட்பட்ட போது கைது செய்யப்பட்ட நிலையில் அகதிகள் 111 பேரும் காலி துறைமுகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டனர்.
அவர்களை இன்று காலி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காலியில் இருந்து 220 கடல் மைல்கள் தூரத்தில் படகு மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா பயணித்துக் கொண்டிருந்த போதே அவர்கள் கைதாகினர்.
கைதானவர்களில் 43 ஆண்களும், 20 பெண்களும், 48 சிறுவர்களும் உள்ளடங்கியிருப்பதாக கடற்படைத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் பேருவளை போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியா சென்ற நிலையில் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா வீசாவில் வியாபாரம் செய்த இந்திய பிரஜை கைது
யாழ்ப்பாண - கோப்பாய் பொலிஸ் பிரிவில் கல்வியங்காடு நகரில் வைத்து சுற்றுலா வீசாவில் தங்கியிருந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த இந்திய பிரஜை சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று புதன்கிழமை யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten