[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:10.07 PM GMT ]
கம்பளை நகரில் சிறுவனொருவனை நபரொருவர் பணத்திற்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கம்பளை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து கம்பளை பொலிஸார் சிறுவனை வாங்குவதற்கு செல்வது போல் சென்று சந்தேகநபரை மடக்கி பிடித்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சந்தேக நபர் தனது அண்ணனின் ஆண் பிள்ளைகளை விற்பனை செய்ய முயற்சி செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இதற்கு முன்பு இச்சிறுவனின் இரண்டு வயது சகோதரனை ஐயாயிரம் ரூபாவுக்கு குருணாகல் பகுதி தம்பதியொருவருக்கு விற்பனை செய்துள்ளமையும் விசாரணைகளை தொடர்ந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுவனை வாங்கிய நபரை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இச்சிறுவர்கள் இருவரும் கம்பளை நகரத்தை அண்டிய பெருந்தோட்டப் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் இவர்களின் தாய் சிறிது காலத்திற்கு முன்பு இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய கம்பளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgsy.html
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் அரைவாசி சீனாவிற்கு சொந்தம்: லக்ஸ்மன் கிரியல்ல
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:32.51 PM GMT ]
நாட்டுக்கு முதலீடுகளே தேவைப்படுகின்றது. கடன் பெற்றுக் கொள்வதில் அர்த்தமில்லை.
கடந்த அரசாங்கம் எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்திற்கும் இடமளிக்கவில்லை. முடிந்தளவு கடன்களையே பெற்றுக்கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனை செலுத்த முடியாத காரணத்தினால், அரைவாசி துறைமுகம் சீனாவிற்கு சொந்தமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgsz.html
Geen opmerkingen:
Een reactie posten