தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 9 februari 2015

யாழ்.இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது

மத்திய மாகாண கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பொறுப்புக்கள் ராமிடம் ஒப்படைப்பு
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 07:53.00 AM GMT ]
மத்திய மாகாண கல்வி அமைச்சின் தமிழ் பிரிவு பொறுப்புக்கள் மாகாண விவசாய அமைச்சர் ராமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சு தமிழ் பிரதிநிதி ஒருவரிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இராமநாதன் தொண்டமான், வீ.புத்திரசிஹாமனி, எஸ்.அருள்சாமி, பெ. ராதகிருஸ்ணன் மற்றும் அனுசா சிவராஜ் உள்ளிட்ட பலர் மத்திய மாகாண தமிழ் அமைச்சர்களாக கடமையாற்றியுள்ளனர்.
எனினும் கடந்த மாகாண சபைத் தேர்தலின் போது கல்வி அமைச்சின் ஒட்டு மொத்த பொறுப்புக்களும் கல்வி அமைச்சரும் முதலமைச்சருமான சரத் ஏக்கநாயக்கவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த விடயம் தொடர்பில் தமிழ் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த வந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழ் கல்விப் பிரிவின் பொறுப்புக்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரும் மத்திய மாகாண விவசாய அமைச்சருமான எம். ராமிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjx4.html



மட்டு. கரடியனாறில் வான் சில்லுக்குள் அகப்பட்டு பெண்ணொருவர் பலி
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 08:06.07 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவெட்டுவானில் இன்று திங்கட்கிழமை காலை ஏழு மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மகலேகம் தெரிவித்தார்.
செங்கலடி வேப்பவெட்டுவானைச் சேர்ந்த எஸ்.நாகேஸ்வரி (வயது 44) என்ற குடும்பப் பெண்ணே கொல்லப்பட்டுள்ளார்.
தற்சமயம் இவரது சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதென்று பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
வேப்பவெட்டுவானில் இந்தப் பெண் தனது கடை அருகே நின்ற போது பின் பக்கமாக வானை வேகமாகத் திருப்புகையில் வான் சில்லுக்குள் அகப்பட்டு பெண் மரணமாகியுள்ளார்.
வான் கைப்பற்றப்பட்டதோடு வான் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும் கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரி சி.மகலேகம் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த வானின் சாரதி முன்னாள் அம்பியூலன்ஸ் வண்டிச் சாரதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்று விசாரணையின் போது தெரிய வந்திருக்கின்றது.

மகிந்த சிந்தனையை நடைமுறைப்படுத்த ஒன்றிணைவோம்: தினேஷ் குணவர்தன
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 08:21.33 AM GMT ]
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றி பாதையில் கொண்டு செல்ல பாராளுமன்றத்தில் மாத்திரமல்லாது மக்களோடு மக்களாக இணைந்து ஜனநாயக முறையில் செயலாற்றுவோம் என முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றும் நோக்கில் அல்ல வாக்களித்தனர்.
முன்னாள் ஜனாதிபதியினால் அறிமுகப்படுத்தப்பட்ட மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கிலேயே வாக்களித்தனர் என முன்னாள் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியதோடு, ஐ.ம.சு.கூ ஆதரவாளர்களை மீண்டும் பலப்படுத்தி அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்க நாம் தொடர்ந்தும் பணியாற்றுவோம் என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjx7.html
அமைச்சர் பைஷர் முஸ்தபா இராஜினாமா
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 08:37.18 AM GMT ]
சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைஷர் முஸ்தபா தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இருந்த போதும் புதிய அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் பைஷர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா இராஜினாமா
சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என தெரிவித்துள்ளார்.
அமைச்சின் கீழ் இயங்கி வரும் விடயங்கள் பிரிக்கப்பட்டமை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் நியமனம் தொடர்பில் முரண்பட்டே பதவியை இராஜினாமா செய்வதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
எதிர்வரும் காலங்களில் சட்டத்தரணி தொழிலை சிறப்பாக மேற்கொள்ளவே அமைச்சுப் பொறுப்பினை கைவிட்டேன்.
எவ்வாறெனினும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன்.
கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தனது பணிகளை சிறந்த முறையில் செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன் என பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியின் கீழ் தாம் போட்டியிட உள்ளேன் என்பது பற்றிய விபரங்களை வெளியிடவில்லை.

http://www.tamilwin.com/show-RUmtyCTdKdioy.html


யாழ்.இளைஞன் புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்கவில் கைது
[ திங்கட்கிழமை, 09 பெப்ரவரி 2015, 08:01.08 AM GMT ]
கட்டாரில் இருந்து இலங்கை வந்த யாழ் இளைஞன் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கட்டுநாயக்கவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கியு.ஆர். 660 ரக விமானத்தின் மூலம் டோஹா கட்டார் ஊடாக இத்தாலிக்குச் செல்லும் நோக்கில் இலங்கையில் புறப்பட்டிருந்தார்.
எனினும் குறித்த நபர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து இத்தாலிக்குச் செல்ல முற்பட்டதாக தெரிவித்து கட்டார் அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நாடு திரும்பிய குறித்த நபரை ஸ்ரீலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இத்தாலியிலுள்ள நண்பர் ஒருவரால் குறித்த யாழ்ப்பாண இளைஞனுக்கு 6 மாத கால வீசா வழங்கப்பட்டுள்ளாகவும், இதற்காக போலி ஆவணங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள நபரை நீர்கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதேவேளை கடந்த வாரத்தில் இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTdKdjx5.html

Geen opmerkingen:

Een reactie posten