[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 03:36.08 PM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இந்திய மீனவர்களின் வடக்கு கடல் அத்துமீறல்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 15ஆம் திகதியன்று இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.
வடக்கு கடலில் பல்வேறு தடவைகளாக இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவங்கள் இடம்பெற்றன. இதனை தடுக்க இரண்டு கட்ட பேச்சுக்கள் இடம்பெற்ற போதும் அதில் இணக்கங்கள் காணப்படவில்லை.
இந்தநிலையில் இரண்டு நாடுகளும் இணைந்து கூட்டு கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை ஒன்றை தாம் முன்வைத்தாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgs0.html
வடமாகாணசபை இனவழிப்பு பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும்!- எதிர்க்கட்சித் தலைவர்
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2015, 11:24.31 PM GMT ]
இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் இனவழிப்பு குறித்த வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை உடன் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படும் மனிதப் படுகொலைகள் குறித்து சர்வதேச விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு, சில நாட்களுக்கு முன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கொண்டுவந்துள்ள பிரேரணையையே உடன் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரமில்லையெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இவ்வாறான விதிமுறைகளுக்குப் புறம்பான செயற்பாட்டினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்டியெழுப்பப்படவுள்ள தேசிய நல்லிணக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாகவே தாம் கருதுவதாக எதிர்க்கட்சித் தலைவர நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSWKdgs1.html
Geen opmerkingen:
Een reactie posten