[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 10:35.14 AM GMT ]
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சம்பந்தப்படுத்தி வெளியிட்ட தகவலின் அடிப்படையில் இந்த சம்பவங்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் கொழும்பு மாவட்டத்தில் வாழும் பல குடும்பங்களின் உறுப்பினர்கள் தன்னை சந்தித்து தமது துயரங்களை வெளிப்படுத்தியதாகவும் தமது உறவினர்கள் வெள்ளை வான் அல்லது ஏனைய முறைகளில் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறியதாகவும் கிந்தல்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் சுசில் கிந்தல்பிட்டிய, கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் 13 பேரின் பட்டியல் ஒன்றையும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கையளித்துள்ளார்.
கஸ்தூரி ஆராச்சிகே அந்தனி, மொஹமட் டிலான், ரஜீவ் நாகநாதன்., விஸ்வநாதன் பிரதீப், மொஹமட் சாஜிக், ராமலிங்கம் திலகேஸ்வரன். ஜனக்க பிரபாத் தொடம்பாகே கமகே, எம்.ஏ. பிரதீப் கிறிஸாந்தன, கெலும் நிஷாந்த பீட்டர், கயான் பிரியசந்த, எம்.எஸ்.மொஹமட் பாருக், சமிந்த அனுர ஜயலத், ரவிந்திர உதயசாந்த ( இவர் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்டவர்) ஆகியோரின் பெயர்களையே கிந்தல்பிட்டிய வழங்கியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, கடந்த ஜனவரி 17ம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை செய்திருந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், வெள்ளை கலாசாரத்தின் ஆசிரியர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என குறிப்பிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgx3.html
யுத்த குற்ற விசாரணை அறிக்கை சமர்ப்பித்தல் தொடர்பாக திங்களன்று கூட்டம்!
[ வெள்ளிக்கிழமை, 13 பெப்ரவரி 2015, 10:35.28 AM GMT ]
ஜெனீவாவில் நடைபெறவுள்ள கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்படவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 25ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தினால் உள்நாட்டு பொறிமுறையை உருவாக்குவதற்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறு புதிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து இவ் அறிக்கையை சமர்ப்பித்தல் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனிவாவில் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் குழுக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSXKdgx4.html
Geen opmerkingen:
Een reactie posten