தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 16 februari 2015

மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது



பாப்பரசருக்கு வழங்கிய நன்கொடையை இலங்கைக்கே பரிசளிக்க தீர்மானம்
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 10:10.09 AM GMT ]
பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களுக்கு இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபை வழங்கிய நன்கொடையை இலங்கைக்கே மீண்டும் பரிசளிக்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார்.
கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் சமூக சேவை நிதியத்திற்கு 8.7 மில்லியன் ரூபாவை இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் நன்கொடையாக வழங்கப்பட்டிருந்தது.
எனினும் அந்த பணத்தை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு வழங்க பாப்பரசர் தீர்மானித்துள்ளார்.
இந்த பணத்தில் இலங்கையில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்து அது தொடர்பான அறிக்கை சமர்பிக்குமாறு பாப்பரசர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கத்தோலிக்க ஆயர்கள் சபையினால் குறித்த பணத்தொகையை ஏழை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaSUnoyD.html


மோடியுடன் மைத்திரி சந்திப்பு: இந்தியா-இலங்கை இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது
[ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2015, 11:22.01 AM GMT ]
நான்கு நாள் உத்தியோக பூர்வமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அணுசக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஜனாதிபதி மைத்திரிபால இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அதற்கு முன்னதாக அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்பு அளித்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி சிறிசேன ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது அணு ஒப்பந்தங்கள் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், மோடியும், சிறிசேனவும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, "இந்தியாவுக்கும் - இலங்கைக்குகும் இடையே வலுவான பந்தம் இருக்கிறது. இதன் காரணமாகவே ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் எனது முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது.
இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா - இலங்கை இடையேயான உறவு மேலும் வலுப்பெறும். பல்வேறு ஒப்பந்தங்களில் இன்று இருநாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இந்தியப் பயணம் திருப்திகரமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர், எங்கள் நாட்டுக்கு வருகை தர வேண்டும்" என்றார்.
முன்னதாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா - இலங்கை நட்புறவு புதிய பரிமாணங்களை எட்டும் தருணம் வந்துவிட்டது. இலங்கை ஜனாதிபதி சிறிசேனா என்னை அவர்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். நிச்சயமாக வரும் மார்ச் மாதம் அவர்கள் நாட்டுக்குச் செல்வேன்.
மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நானும், சிறிசேனாவும் முனைப்புடன் இருக்கிறோம். இந்தியா - இலங்கை பரஸ்பரம் நம்பிக்கைக்கு, இப்போது கையெழுத்தாகியுள்ள அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒரு சான்றாகும்.
விரைவில், இந்தியா - இலங்கை வர்த்தக செயலர்கள் அளவிளான சந்திப்பு நடைபெறும். மரபுசாரா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் இருநாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து விரிவாக ஆலோசித்தோம்" என்றார்.
இதேவேளை, நாளை 17ம் திகதி பிஹாரில் உள்ள புத்த கயாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்பு பிரார்த்தனை நடத்துகிறார். அங்கிருந்து திருப்பதி செல்லும் அவர் ஏழுமலையானை வழிபடுகிறார். புதன்கிழமை காலை திருப்பதியில் இருந்து கொழும்பு புறப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSaSUnoyF.html

Geen opmerkingen:

Een reactie posten