தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 11 februari 2015

ஜெனிவாவில் இம்முறை இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு..!

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்தில் முன்வைக்கப்படவுள்ள இலங்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச விசாரணை அறிக்கைக்கு ஆதரவு வழங்கப்படாது என்று இந்தியா அறிவித்துள்ளது.
புதிய அரசாங்கம் பதிவியேற்று குறுகிய காலமே சென்றுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய அரசாங்கம் எண்ணுவதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

யுத்த காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நிறைவு பெற்றுள்ளதாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் 2014ம் ஆண்டு முன்வைத்த யோசனைக்கு இந்தியா வாக்களிக்காமல் விலகியிருந்தது.

இந்த நிலையில், இவ்வாறான சர்வதேச விசாரணை அறிக்கையின் மூலம் புதிய அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்க இந்தியா விரும்பாது என்றும் ஹிந்து குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் மார்ச் மாதம் 15ம் திகதி இந்தியா செல்லும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமை தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSVKdht0.html

Geen opmerkingen:

Een reactie posten