[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 11:01.36 AM GMT ]
எதிர்க்கட்சியின் 114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இது தொடர்பில் விவாதத்திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
வத்தளை நகரசபையில் அமைச்சரின் ஆதரவாளர்களால் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புதிய அரசாங்கம் தாக்கல் செய்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
தொடர்புடைய செய்தி:
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdku6.html
இலங்கைக்கு வருமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அழைப்பு
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 11:28.59 AM GMT ]
இது தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பினை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விடுத்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அழைப்பு இன்று அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வருகைக்கான உத்தேச திகதி குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdku7.html
யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் படுகாயம்
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 11:42.46 AM GMT ]
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வீட்டில் இருந்த குடும்பஸ்தரை வெளியில் இழுத்துச் சென்று ஒரு குழுவினர் அவர் மீது தீடீரென வாளினால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சங்கத்தானையைச் சேர்ந்த 34 வயதுடைய செல்வராசா உதயாராசா என்பவரே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயுத களஞ்சியத்தை நடத்திய நிறுவனத்தின் இலாபம் யாருடைய பைகளுக்குள் சென்றது?
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 11:47.59 AM GMT ]
சர்வதேச கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக வருடாந்தம் இந்த செலவு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச கடலில் பயணிக்கும் கப்பல்களுக்கு முன்னர் பாதுகாப்பு வழங்கிய இலங்கை கடற்படை 2011 ஆம் ஆண்டு வரை 30 கோடி டொலர்களை சம்பாதித்திருந்தது. இது இலங்கை நாணய பெறுமதியில் 3 ஆயிரத்து 900 கோடி ரூபாவாகும்.
இதனடிப்படையில் இலங்கை கடற்படைக்கு கிடைத்து வந்த 3 ஆயிரத்து 900 கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
எவண் காட் நிறுவனம் வருடாந்தம் 3 ஆயிரத்து 400 கோடி ரூபாவை இலாபமாக பெற்றுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வளவு பெருந்தொகை பணம் யாருடை பைகளுக்குள் சென்றது என்ற பாரதூரமான கேள்வி எழுந்துள்ளது.
எவண் காட் நிறுவனத்திற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே இந்த பாதுகாப்பு பணியை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkvz.html
கனடாவில் அரசியல்வாதிக்கு மின்னஞ்சலில் அச்சுறுத்தல் அனுப்பிய தமிழர் கைது
[ சனிக்கிழமை, 07 பெப்ரவரி 2015, 12:03.22 PM GMT ]
கனடாவில் அரசியல்வாதி ஒருவர் உட்பட ஐந்து பேருக்கு மின்னஞ்சல் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறொன்ரோவைச் சேர்ந்த 51 வயதான ரூபன் பாலராம்-சிவராம் என்ற நபரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்ததாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று கனடாவில் வெளியான செய்தி ஒன்றில்,
குறித்த சந்தேக நபர் மக்களை தொலைபேசி மூலம் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும் மின்அஞ்சல் மூலம் மரண அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்பு பிரச்சாரங்களை அனுப்பியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த அச்சுறுத்தல்கள் பல வித்தியாசமான தரப்பட்ட மக்களிற்கு விடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள், பொது நபர்கள், அரசாங்கத்தில் உள்ளவர்கள், பிரபல்யங்கள் முதல் சாதாரண மக்கள் வரை இந்த அச்சுறுத்தல் சென்றுள்ளது.
பெயர் வெளிவராத அரசியல்வாதி ஒருவர் சந்தேக நபரிற்கெதிராக முன்வந்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக ரொறொன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCTbKdkv0.html
Geen opmerkingen:
Een reactie posten