தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 17 februari 2015

சமூக வலைத்தளம் ஊடாக சட்டவிரோத சிறுநீரக விற்பனை கண்டுபிடிப்பு! ஹைதராபாத்தில் 4 பேர் கைது

இலங்கையர்களுக்கு இந்தியா ஒன் அரைவல் வீசா வழங்கத் தீர்மானம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 02:59.23 AM GMT ]
இலங்கைப் பிரஜைகளுக்கு, இந்தியா ஒன் அரைவல் வீசா வழங்கத் தீர்மானித்துள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளின் பிரஜைகளுக்கு இந்தியா, ஒன் அரைவல் வீசா வழங்கி வருகின்றது.
எனினும், இந்த நாடுகளின் பட்டியலில் இதுவரையில் இலங்கை இடம்பிடிக்கவில்லை.
அல் கைதா, தலிபான் போன்ற தீவிரவாதிகள் இலங்கையைக் களமாகப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் ஊடுறுவிவிடக் கூடுமென்ற அச்சம் காரணமாக இவ்வாறு இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கப்படவில்லை.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்திற்கு சமாந்திரமாக இவ்வாறு இலங்கையர்களுக்கு ஒன் அரைவல் வீசா வழங்கப்பட உள்ளது.
எதிர்வரும் காலங்களில் இலங்கையர்கள் முன்கூட்டியே வீசா பெற்றுக்கொள்ளாது, இந்திய விமான நிலையத்தில் வீசாவை பெற்றுக்கொள்ள முடியும்.
முதல் கட்டமாக அரசாங்க அதிகாரிகளுக்கு இந்தியா ஒன் அரைவல் வீசா வழங்க உள்ளது.
அடுத்த கட்டமாக அனைத்து இலங்கையர்களுக்கும் வீசா வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவிற்கு ஆதரவான கூட்டத்தில் மேல் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்க இணக்கம்
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 03:11.24 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக நாளை நடைபெறவுள்ள கூட்டத்தில் மேல் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பெரும் எண்ணிக்கையிலான மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றவர்களினால் நாளை நுகேகொடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவளிக்கும் நோக்கில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் சுமார் நாற்பது மேல் மாகாணசபை உறுப்பினர்கள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
சுவாஸ்திபுரவில் மேல் மாகாணசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டமொன்றை நடத்தியுள்ளனர்.
மஹிந்தவிற்கு ஆதரவான கூட்டத்தில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் கூட்டம் நிறைவடைந்தது.
பின்னர் நுகோகொடை கூட்டத்தில் பங்கேற்பது என பெரும்பான்மையான உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
மேல் மாகாணசபையில் 56 ஆளும் கட்சி உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் 40 பேர் கூட்டத்தில் பங்கேற்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, மஹிந்தவிற்கு ஆதரவான நுகோகொடை கூட்டத்தில் பங்கேற்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது.

வெறுப்புணர்வுகளை களைந்து செயற்படுமாறு ரணில் அழைப்பு
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 03:20.23 AM GMT ]
வெறுப்புணர்வுகளை களைந்து செயற்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வருவதற்கான நிலையையே சிவராத்திரி உணர்த்துகிறது.
இந்தநிலையில் இலங்கையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப வேண்டும் என்று ரணில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் இன்று சகோதரத்துவத்துடனான அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
எனவே இதன்போது வெறுப்புணர்வை தவிர்க்க திடகங்கற்பம் பூண வேண்டும் என்று ரணில் கோரியுள்ளார்.

சமூக வலைத்தளம் ஊடாக சட்டவிரோத சிறுநீரக விற்பனை கண்டுபிடிப்பு! ஹைதராபாத்தில் 4 பேர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2015, 03:38.59 AM GMT ]
சமூக வலைத்தளங்களுக்கு ஊடாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கை ஒன்றை இந்திய ஹைதராபாத் பொலிஸார் நேற்று கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் 9 கடவுச்சீட்டுகளையும் இரண்டு மடிக்கணனிகளையும் 6 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர்.
ஏற்கனவே இலங்கை உட்பட்ட வகையில் இவ்வாறான சம்பவம் ஒன்று இந்திய ஊடகங்களினால் வெளியிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று சம்பவம் தொடர்பில், 60வயதான மருத்துவரான ஹிர்டேஸ் செக்ஸ்னா, ராகவேந்தர் என்று அழைக்கப்படும் 34 வயதான மருத்துவர் சஞ்சய் கபூர், 22 வயது மாணவர் ஏ அசோக், கடவுச்சீட்டு முகவரான 32 வயதான சஞ்சய் குமார் ஜெய்ன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், ராகவேந்தர் என்பவர் தமது சிறுநீரகத்தை ஏற்கனவே விற்பனை செய்துள்ளார். இவரும் அசோக் என்பவரும் ஆட்களை தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவர் செக்ஸ்னா, ஒரு ஆளுக்கு 3 லட்சம் ரூபா என்ற அடிப்படையில் தரகுப்பணம் வழங்கியுள்ளார்.
இதில் 50ஆயிரம் ரூபாவை அசோக், கடவுச்சீட்டு முகவரான சஞ்சய்குமாருக்கு வழங்கி வந்துள்ளார்.
இதேவேளை சிறுநீரகத்தை பெற்றுக்கொள்பவர்களுக்கு மருத்துவர் செக்ஸ்னா 30 லட்சம் ரூபாவை அறவிட்டு வந்துள்ளார்.
அதேநேரம் சிறுநீரக வழங்கிகளுக்கு 3 லட்சம் ரூபாவை வழங்கி வந்துள்ளார்.  இந்த வியாபாரம் கடந்த ஒரு வருடமாக இடம்பெற்று வந்துள்ளது.
இதன்படி 10பேர் வரை தமது சிறுநீரகங்களை விற்பனை செய்துள்ளனர்.
இந்தநிலையில் சிறுநீரக மாற்று சிசிக்சைகள், இலங்கையின் நவலோக்க, லங்கா ஹொஸ்பிட்டல் மற்றும் ஈரானில் உள்ள மொஹாப் மருத்துவமனை என்பவற்றில் இடம்பெற்றுள்ளன என்று ஹைதராபாத் பொலிஸார் தெ ஹிந்துவுக்கு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCSbSUno1E.html

Geen opmerkingen:

Een reactie posten