[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:40.38 AM GMT ]
இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது தாம் இலங்கையின் வெளியுறவு அமைச்சருடன் சிறந்த சந்திப்பு ஒன்றை மேற்கொண்டதாக ஸ்வைர் குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த மாதம் இலங்கை வந்திருந்த ஸ்வைர், ஜனாதிபதி பிரதமர், வடக்கு ஆளுநர் உட்பட்ட வகையில் அனைத்து தரப்பினரையும் சந்தித்தார்.
இதன்பின்னர் நாடு திரும்பும்போது இலங்கை அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஸ்வைர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை தற்போது லண்டன் சென்றுள்ள இலங்கையி;ன் வெளியுறவு அமைச்சர் அங்கிருந்து அமரிக்காவுக்கு சென்று ராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை சந்திக்கவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis4.html
இந்தியாவுடன் சிறப்பான உறவை மேம்படுத்திக் கொள்ள விருப்பம்: ஜனாதிபதி
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 02:54.13 AM GMT ]
இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்திய பிரதமர் அவருக்கு வாழ்த்துக்கூறி அனுப்பிய செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே மைத்திரிபால தமது செய்தியை அனுப்பியுள்ளார்.
இந்திய ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 15ஆம் திகதியன்று மைத்திரிபால சிறிசேன, இந்தியாவுக்கு செல்லும் நிலையிலேயே இந்த செய்தியை ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis5.html
மீனவ படகுகளை விடுவிக்க சட்ட ஏற்பாடுகளை செய்யுமாறு தமிழக அரசாங்கம் கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 03:14.42 AM GMT ]
இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவுக்கு தமிழக மீள்வளத்துறை செயலாளர் எஸ்.விஜயகுமார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தமிழக மீனவர்கள் 81 படகுகள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி சட்டசெலவுகள் யாவற்றையும் இந்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று விஜயகுமார் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நீதிமன்றத்துக்கு செல்லாமல் இந்த படகுகளை விடுவிப்பது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் மீண்டும் ஒருமுறை பேச்சு நடத்துமாறும் விஜயகுமார், வை.கே.சிங்ஹாவிடம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdis7.html
அரசியல் அடிப்படையில் மக்களுக்கு சேவையாற்ற அனுமதிக்க முடியாது: கரு ஜயசூரிய-ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு
[ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2015, 03:38.49 AM GMT ]
அரசியல் பேதங்களுடன் மக்களுக்கு சேவையாற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுகின்றது. அவ்வாறு அரசியல் பேதம் பாராட்டுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கப் போவதில்லை.
எந்தவொரு உள்ளூராட்சி மன்றத்திற்கும் அரசியல் ரீதியாக பிரிவினை பாராட்டுவதில்லை. கடந்த காலங்களில் எதிர்க்கட்சிகளுக்கு அதிகாரம் இருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.
அவ்வாறான அநீதிகளை புதிய அரசாங்கம் இழைக்காது. மக்களின் வரிகளைக் கொண்டு முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மக்களுக்கு நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டுமென கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் ஜனநாயகத்தில் புதிய மாற்றம்: கரு
ஏப்ரல் 24ஆம் திகதிக்கு பின்னர் இந்நாட்டின் ஜனநாயகத்தில் பாரிய மாற்றம் இடம் பெறவுள்ளதாக புத்த சாசன அமைச்சர் மறறும் மாகாண மற்றும் உள்ளூராட்சி மற்றும் ஜனநாயக ஆட்சி அமைச்சர் கரு ஜயசூரிய இன்று தெரிவித்துள்ளார்.
நெலும் பொக்குன மாவத்தை மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தையாக மாற்றம் செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துக்கொண்டு கரு ஜயசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdit0.html
Geen opmerkingen:
Een reactie posten