தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 4 april 2014

ஈழத்தமிழர் பிரச்சினையினாலேயே மத்திய அரசிலிருந்து திமுக விலகியது!- கருணாநிதி!!nee nadikandaa!!

பயங்கரவாதிகள் உருவாகாமல் தடுக்கவே வடக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளது!- முல்லைத்தீவில் கோத்தபாய
[ வியாழக்கிழமை, 03 ஏப்ரல் 2014, 11:47.32 PM GMT ]
முப்பது வருட காலமாக நிலவிய பயங்கரம் மீண்டும் உருவாகாமல் தடுக்கவும் பயரங்கரவாதிகள் மீண்டும் உருவாகாமல் தடுக்கவுமே இராணுவத்தினர் வடக்கில் நிலைகொண்டுள்ளனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச இன்று முல்லைத்தீவில் தெரிவித்தார்.
கேப்பாபுலவு மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் கட்டப்பட்ட 101 வீடுகளின் திறப்புக்களை மக்களிடம் கையளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது விமானப்படையால் அபகரிக்கப்பட்ட காணிகளில் இருந்து 29 காணிகள் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது.
இராணுவத்தை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் வடக்கிலிருந்து அகற்றப்போவதில்லை என்று தெரிவித்த கோத்தபாய அதற்காக யாருடைய அச்சுறுத்தலையும் பொருட்படுத்தப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மீண்டும் புலிகள் உருவாகாமல் இருக்க இராணுவத்தினர் வடக்கில் அவசியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவமுகாம் ஒரு பிரதேசத்தில் இருந்தால் அந்தப் பிரதேசத்தின் வருமானம் அதிகரிக்கும் எனத் தெரிவித்த கோத்தபாய இங்கு மொழிப் பிரச்சினை காரணமாகவே இராணுவத்திற்கும் மக்களுக்கும் நல்ல உறவில்லை என்றும் தெரிவித்தார். இதற்காக ஜனாதிபதி மும்மொழிகளையும் கற்பிற்குடம் முயற்சியில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மக்கள் இராணுவத்தினருடன் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மக்களும் இராணுவமும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனும் நெருக்கத்துடனும் பழக வேண்டும் என்றும் அதன் மூலம் மீண்டும் பயங்கரவாதம் உருவாகாமல் தடுக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் சென்ற கோத்தபாய அங்கும் ஒன்பது வீடுகளை மக்களிடம் கையளித்துள்ளார்.
2ம் இணைப்பு
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரச உத்தியோகத்தர்களின் கடமை!  கோத்தபாய 
பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரச உத்தியோகத்தர்களின் பிரதான கடமையாகும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளை பல்வேறு சட்டங்களையும் நியதிகளையும் காண்பித்து கால தாமதப்படுத்துவது முறையல்ல.
போர் காரணமாக வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் 98 வீதமானவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
அத்துடன், இந்த பிரதேசத்தில் மீள்குடியேறியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பில் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இவை தொடர்பில் அரசாங்கத்தினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மிக விரைவில் இக்குறைபாடுகளும் தீர்த்து வைக்கப்படும் என்று கோத்தபாய ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினையினாலேயே மத்திய அரசிலிருந்து திமுக விலகியது!- கருணாநிதி
[ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2014, 12:19.34 AM GMT ]
ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்து உடனடியாக விலகிக்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது என கருணாநிதி தெரிவித்தார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேள்வி:- தி.மு.க. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலக உண்மையான காரணம், இலங்கைத் தமிழர் பிரச்சினை அல்ல என்றும், அலைக்கற்றை வழக்குதான் காரணம் என்றும் ஜெயலலிதா கோவையில் கூறியிருக்கிறாரே?.

பதில்:- அலைக்கற்றை வழக்குக்காக மத்திய அரசில் இருந்து விலகுவது என்றால், அந்த வழக்கில் தி.மு.க.வினரை கைது செய்தபோதே விலகி வந்திருப்போம். ஆனால் அப்போது தி.மு.க. மத்திய அரசில் இருந்து விலகவில்லை.
மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகிய போது நான் விடுத்த அறிக்கையில்,
தமிழ் இளைஞர்களும், வாலிபர்களும் தங்கள் இனம் வாழ - மொழி வாழ - நடத்திய வீர மரணப் போராட்டங்கள்கூட தமிழ் உணர்வற்றவர்களால் எள்ளி நகையாடப்பட்டாலும், அவைகளையெல்லாம் மீறி நமது குறிக்கோள் வெற்றியே முக்கியம் என்ற கொள்கை உறுதியோடு, ஈழப்போரில் மாண்டு மடிந்த போராளிகளுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிற சூழலில்,
அவர்தம் காலடி மண்ணெடுத்து, அதனைத் திலகமாக இட்டுக்கொண்டு, அந்தத் திலகத்தின் சாட்சியாக - தமிழ் ஈழத்தில் சிங்களப் பேரினவாதிகளால் நடத்தப்பட்ட - அதிலும் குறிப்பாக ராஜபக்ச அரசின் போர்க்குற்றங்கள் மலிந்த - இருகருத்துக்கு இடமில்லாத வகையில் இனப்படுகொலையே நடத்தப்பட்டு - உலக அரங்கில் உள்ள நாடுகளின் விவாதத்திற்கு உரியதாக ஆகிவிட்ட இந்தச்சூழலில்,
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியத் திருநாடு, இந்தப் பிரச்சினையின் ஆழத்தை உணராமல், விளைவுகளைக் கருதாமல், ஒதுங்கி நிற்பதோ; அல்லது எதிர்மறை கருத்துரைப்பதோ - இந்தியாவில் காந்தியடிகளும், இலங்கையில் தந்தை செல்வநாயகமும் சுதந்திரப் போராட்டத்திற்காகத் தேர்ந்தெடுத்து நடத்திய அறவழிகளை - அறவே மூடிவிடுவதற்கான; ஜனநாயக விரோதச் செயல்களாகும்.
இவைகளையெல்லாம் ஐ.நா. மன்றத்திலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திலும் நீதி நெறியோடு ஆராய்ந்து பார்த்து - அனைத்து நாட்டு மக்களின் இதயத்தையும் குளிர வைக்கும் முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்த்தோம்.
ஆனால் அதற்கு மாறாக இழப்பின் உச்சத்திற்கே தள்ளப்பட்ட இலங்கையும், அந்த இலங்கையின் "தொப்புள் கொடி" உறவுகொண்ட தமிழகம் இடம்பெற்றுள்ள இந்தியாவும், இந்த ஜனநாயக விரோதச் செயல்களுக்கு கதவுகளைத் திறந்துவிட்டிருப்பதை இன உணர்வுள்ள எந்த ஒரு தமிழனாலும் ஏற்றுக்கொள்ள இயலாது.
எனவே "குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதை"யாக, அமெரிக்காவின் வரைவுத் தீர்மானத்தை பெருமளவுக்கு நீர்த்துப்போக விட்டதோடு, தி.மு.க. முன்மொழிந்த திருத்தங்கள் எவற்றையும் இந்திய அரசு சிறிதும் பரிசீலனையும் செய்யவில்லை.
எனவே, ஈழத்தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதற்குப் பிறகும் இந்திய மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழினத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தும் உடனடியாக விலகிக்கொள்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது" என்ற வரிகளை மீண்டும் ஒரு முறை படித்தால், தி.மு.க. எதற்காக மத்திய அரசில் இருந்து விலகியது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyETYLWgx7.html

Geen opmerkingen:

Een reactie posten