[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 05:38.49 AM GMT ]
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் 424 தமிழர்கள் தொடர்பான வர்த்தமானி பிரசுரம் தொடர்பில் பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும், அது தொடர்பில் தெளிவின்மையே அதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் 2011 ம் ஆண்டு செப்டம்பர் தாக்குதலை தொடர்ந்து 1373, 1267 ம் இலக்கம் கொண்ட இரு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒன்று தலிபான் மற்றும் அல்கைதா அமைப்புக்களை தடை செய்வதாகவும் அதனுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புக்களை இனம் கண்டு அவற்றுக்கு எதிராக செயற்படுவதாகவும் அமைந்துள்ளன.
இரண்டாவது தேசிய மட்டங்களில் செயற்படும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அமைப்புக்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் பட்டியலிட்டு செயற்படுபடுவதாகும்.இது 1373 ஆம் இலக்கம் கொண்ட பிரேரணை.
இந்த இரு நிறைவேற்றப்பட்ட பிரேரணைகள் தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டு அவை அமுல் செய்யப்பட்டு வருகின்றது.
1267 ம் இலக்க பிரேரணை தொடர்பில் இலங்கை பிரதி நிதியாக மேஜர் ஜெனரல் கபில ஹெந்த விதாரன செயற்படுகின்றார்.
1373 ஆம் இலக்கம் கொண்ட பிரேரணை தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச செயற்படுகின்றார்.
இந் நிலையிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் குறித்த பிரேரணைக்கமைய பாதுகாப்பு செயலாளரினால் 16 அமைப்புக்களும் 424 நபர்களும் பட்டியல் படுத்தப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் குறித்த பிரதிநிதிகளை அணுகுவதன் ஊடாக தாம் நிரபராதிகள் எனில் அதற்கான ஆதாரங்களை முன்வைத்து பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்கிக் கொள்ள முடியும்.
அவர்கள் நிரபராதிகள் எனில் அதற்கான ஆதாரங்களை அந் நாட்டில் உள்ள பிரதிநிதிகள் பரீட்சித்து எமக்கு அது தொடர்பில் அறிவிப்பர். அப்போது அவர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்.
எனினும் இதுவரை இலங்கை தடை செய்த 16 புலம்பெயர் அமைப்புக்களும் 424 நபர்களிலும் எவரும் இதுவரை தம்மை விடுவித்துக்கொள்ள முன்வரவில்லை என குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgxy.html
யாழ். பல்கலை விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நேற்றிரவு சோதனை!- மாணவர்கள் பதற்றம்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 04:54.17 AM GMT ]
இதனையடுத்து அப் பகுதியில் பெருமளவிலான இராணுவம் குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின் பின்னணியில் தெரியவருவதாவது,
யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களுக்கு மேல் நிலை வகுப்பில் கல்வி கற்கும் சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் பகிடிவதையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் முதலாம் வருடத்தை சேர்ந்த சிங்கள மாணவன் ஒருவர் பலமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று இரவு 7 மணியளவில் தம்மை இராணுவப் புலனாய்வாளர்கள் என கூறிய நால்வர் எவ்வித அனுமதியுமின்றி விடுதியில் நுழைந்து அங்குள்ள மாணவர்களுக்கும் விடுதி காப்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
அத்துடன் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளையும் சோதனை செய்துவிட்டு சென்றுள்ளனர். பின்னர் அப்பகுதியில் அதிகளவான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக மாணவ தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுவதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் அச்சத்தில் உள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgw5.html
Geen opmerkingen:
Een reactie posten