சிங்கள மாணவர் தாக்குதல்: பாலசிங்கம் ஆண்கள் விடுதி புலனாய்வாளர்களால் முற்றுகை !
25 April, 2014 by admin
யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து அவ்விடயத்தில் படைத்தரப்பு தலையிட்டுள்ளது. இதனிடையே பாலசிங்கம் ஆண்கள் விடுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மாணவர்களுடைய தங்குமிட அறைகளை இன்றிரவு சோதனை மேற்கொண்டுள்ளமை அச்சமான சூழலை தமிழ் மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களுக்கு, மேல் நிலை வகுப்பில் கல்வி கற்கும் சிரேஸ்ட சிங்கள மாணவர்கள் பகிடிவதையாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் முதலாம் வருடத்தை சேர்ந்த சிங்கள மாணவன் ஒருவர் பலமாக தாக்கப்பட்டு வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து நேற்று இரவு 7 மணியளவில் இராணுவப் புலனாய்வாளர்கள் நால்வர் விடுதியினுள் நுழைந்து அங்குள்ள மாணவர்களுக்கும் விடுதி காப்பாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.அத்துடன் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளையும் சோதனை செய்துமுள்ளனர்.
இதனிடையே நேற்று இரவு அதிகளவான இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக மாணவ தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பககிறது.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6742
தேசிய தலைவர் பிரபாகரன் வீட்டில் இருந்து 400 மீட்டர் வரை செல்லும் சுரங்கம் !
25 April, 2014 by admin
சில வாரங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் வசித்த மற்றுமொரு வீட்டை தாம் கண்டுபிடித்துள்ளதாக இராணுவத்தினர் அறிவித்திருந்தார்கள். குறித்த இந்த வீட்டை புலிகள் வெடிவைத்து தகர்த்தும் இருந்தார்கள். புலிகள் குறித்த இடத்தில் இருந்து பின்வாங்கும் வேளை இதனை குண்டுவைத்து தகர்த்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன் நிலையில், அந்த வீட்டில் இருந்து சுமார் 400 மீட்டருக்கு, சுரங்கப்பாதை ஒன்று உள்ளதாகவும் , அச் சுரங்கப்பாதை பின்னர் பிறிதொரு இடத்தில் சென்று தரைக்குமேல் செல்லக்கூடியதாக அமைந்துள்ளதாகவும் இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளார்கள்.
இச் சுரங்கப்பாதையை தற்போது கண்டுபிடித்துள்ள இராணுவத்தினர் அதனுள் செல்லமுடியாத நிலை காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6743
Geen opmerkingen:
Een reactie posten