நாடாளுமன்றத்தில் நேற்றும் நேற்று முன்தினமும் நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஆதரவாக மற்றும் எதிராக வாக்களித்த ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளாத உறுப்பினர்கள் அல்லது விடுமுறையில் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வழமையாக நாடாளுமன்றத்தில் சட்டமூலங்கள் தொடர்பான வாக்கெடுப்பு நடந்த பின்னர், அது தொடர்பான முழுமையான அறிக்கை ஜனாதிபதிக்கும், கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும்.
குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த சில தினங்களில் ஜனாதிபதியிடம் அது கையளிக்கப்படும்.
ஆளும் கட்சியின் குறைந்தது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வர்த்தமானிக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதை கூட்டணி கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும் எனவும் அமைச்சர் தினேஷ் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXftz.html
Geen opmerkingen:
Een reactie posten