தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

இலங்கையில் சிங்கள - முஸ்லிம் மோதலை மேற்குலக நாடுகள் விரும்புகின்றன!- விமல் வீரவன்ச

கஜபாபுரம் வட மாகாணசபைக்கு சொந்தமானது!- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 01:06.36 AM GMT ]
கஜபாபுரம் வட மாகாணசபைக்கு சொந்தமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கஜபாபுரத்தை ஈழ இராச்சியத்தின் ஓர் பகுதியாக அடையாளப்படுத்திய விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர் என சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக கஜபாபுரத்திலிருந்து சிங்கள மக்கள் வெளியேறியிருந்தனர்.  தற்போது குறித்த பிரதேசத்தில் மக்கள் மீளவும் குடியேறி வருகின்றனர். இவ்வாறு குறித்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfr0.html

இலங்கையில் சிங்கள - முஸ்லிம் மோதலை மேற்குலக நாடுகள் விரும்புகின்றன!- விமல் வீரவன்ச
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 02:18.10 PM GMT ]
இலங்கையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் சண்டையிட்டு கொள்வதையே மேற்கத்தைய நாடுகள் எதிர்பார்க்கின்றன என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டால், தமிழ் தீவிரவாதிகள் முஸ்லிம்களுடன் இணைந்து நாட்டில் மற்றும் ஒரு போருக்கு வித்திடுவார்கள் என்று வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கு கிடைக்கும் ஆதரவு குறைந்து போகலாம்.
எனவே இரண்டு சமூகங்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றால் அதனை உடல் ரீதியாக அல்ல. மூளையை பயன்படுத்தி தீர்க்க வேண்டும் என்றும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfu6.html

Geen opmerkingen:

Een reactie posten