[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014, 08:16.45 AM GMT ]
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் என்ற போர்வையில் இருக்கும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வடக்கில் தினமும் 4 பேரை கடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம் சமூகத்தை அவபெயருக்கு உள்ளாக்கவும் அதன் மூலம் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு ஏனைய இனங்களுக்கும் இடையில் இருக்கும் உறவுகளை சீர்குலைக்கும் நோக்கத்திலும் ஞானசார தேரர் வெளியிட்டு வரும் கருத்துக்களால் நான் குழப்பமடைந்துள்ளேன்.
இவ்வாறான தவறாக நடத்தும் செயல்கள் மற்றும் தரப்பினர் குறித்து நான் விசேட கவனத்தை செலுத்தியுள்ளதுடன் எனது ஆழ்ந்த கவலையை வெளியிட விரும்புகிறேன்.
கண்டியில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய பிக்கு ஒருவர் முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத ஒருவருக்கு உணவை வழங்கும் போது அதில் எச்சில் துப்ப வேண்டும் என குர் ஆனில் கூறப்ப்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
அதில் உண்மையில்லை. இவை மனத்தில் உருவகித்து கூறப்படும் மாயையான கதைகள் எனவும் பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா கூறியுள்ளார்.
வடக்கில் தொடரும் கடத்தல் பாணியிலான கைதுகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014, 06:39.18 AM GMT ]
கடத்திச் செல்லப்படுபவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு கடத்தப்படும் பலர் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு வருவதாக வவுனியா துணைப்படை வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்கள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் குடும்பங்கள் சம்பவங்கள் பற்றி ஊடகங்களுக்கு தகவல் வழங்க அஞ்சி வருகின்றனர்.
வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகள் கடந்த புதன்கிழமை இரவு வடமராட்சி தெற்கு, கரவெட்டி பிரதேசத்தில் ஒருவரை கடத்திச் சென்றுள்ளனர்.
கரவெட்டியை சேர்ந்த 42 வயதான தயாநிதி ஆழ்வாப்பிள்ளை என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
வெள்ளை வானில் சென்ற பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அவரை வானில் ஏற்றியதுடன், கைகள் மற்றும் கால்களை கட்டியுள்ளனர்.
கைது செய்யப்படுவதற்கான காரணம் தொடர்பில் அவர்கள் எந்த ஆவணங்களையும் சமர்பிக்கவில்லை.
இந்த நிலையில், தயாநிதி பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்காக கைது செய்திருப்பதை நெல்லியடி பொலிஸார் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் கைது செய்யப்படுவதற்கான காரணம் அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தப்படவல்லை.
கைது செய்யப்பட்ட தயாநிதி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் கே. சிவநேசனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு மாதங்களில் 70 க்கு மேற்பட்ட மக்கள், இராணுவத்தினரின் தமது சொந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சட்டவிரோத கைதுகள் தொடர்பான சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்த சரியான ஆவணங்களோ, ஆதாரங்களோ, உத்தியோகபூர்வ முறைப்பாடுகளோ இருப்பதாக தெரியவில்லை என செய்தி தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 12 மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டதை நிரூபிக்க சாதாரண பதிவுகளோ ஆவணங்களோ இல்லை.
மீண்டும் ஒருங்கிணைய முயற்சித்த மூன்று முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை தாம் நெடுங்கேணியில் சுட்டுக் கொன்றதாக அரசாங்கம் பிரசாரம் செய்தது.
இவ்வாறான சூழ்நிலையில், வடக்கில் தன்னிச்சையான கைதுகள் மற்றும் கடத்தல்கள் தொடர்ந்து வருவதாக வடக்கில் உள்ள சட்ட ஆர்வலர்கள் தெரிவித்ததாகவும் அந்த ஆங்கில இணையத்தளம் கூறியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten