ஜெயலலிதா பிரதமரானால் மஹிந்தவிற்கு தண்டனை
இலங்கையில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்களை உயிரிழக்க காரணமாகவிருந்த இலங்கை ஜனாதிபதி தண்டிக்கப்பட வேண்டுமானால், இந்தியாவில் பிரதமராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
காவிரி பிரச்சினையில் தமிழர்களின் உரிமை உறுதி செய்யப்படவில்லை. மத்திய அரசில் 8 மந்திரிகள் இடம் பெற்றிருந்தும் தமிழகத்துக்கு எதையும் செய்யவில்லை. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும், ராஜபக்ஷ சர்வதேச குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா.
இதுபோன்ற தீர்மானத்தை டெசோ மாநாட்டில் கூட கருணாநிதி நிறைவேற்றவில்லை. இலங்கையில் 1 லட்சத்து 70 ஆயிரம் தமிழர்கள் உயிரிழக்க காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதி தண்டிக்கப்பட வேண்டுமானால், இந்தியாவில் பிரதமராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.
http://www.jvpnews.com/srilanka/66603.html
இலங்கையின் உள்ளக விசாரணைக்கு அமெரிக்க செனட்டில் ஆதரவாம்
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவது தொடர்பான எந்த நடவடிக்கைகளும் உள்நாட்டுப் பொறிமுறைகளின் ஊடாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தும், தீர்மானத்துக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்களிடையே ஆதரவு அதிகரித்து வருவதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 27ம் நாள் சமர்ப்பிக்கப்பட்ட இந்த தீர்மானம் செனட் வெளிவிவகாரக் குழுவின் பரிசீலனையில் உள்ளது.
இந்த தீர்மானத்துக்கு மேலும் ஆறு செனட் உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், இதையடுத்து, இதனை ஆதரிக்கும் செனட் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இந்த தீர்மானம், சிறிலங்கா தொடர்பான விரிவான மற்றும் சமநிலையான கொள்கையை அதிபர் ஒபாமா வகுக்க வேண்டும் என்று கோருகின்றது.
நல்லிணக்க முயற்சிகளுக்கு உள்நாட்டு செயல்முறைகளை வலியுறுத்தும் இந்த தீர்மானம், மனிதஉரிமைகள் நிலையை மட்டும் கருத்தில் அதிபர் ஒபாமா கருத்தில் கொண்டு சிறிலங்கா விவகாரத்தில் செயற்படக் கூடாது என்றும், கோரப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் கேந்திர முக்கியத்துவம் கருதி அமெரிக்காவின் பொருளாதார, பாதகாப்பு நலன்களையும் கவனத்தில் கொள்ளவும், சிறிலங்காவின் இறைமை, உறுதிப்பாடு, பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்கவும் இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
இந்த தீர்மானத்துக்கு இன்னும் பல செனட் உறுப்பினர்கள் ஆதரவளிக்கலாம் என்றும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
அதேவேளை, சிறிலங்காவுக்கு எதிரான அனைத்துலக விசாரணைகளுக்கு ஆதரவு தெரிவித்து செனட் வெளிவிவகாரக் குழுவின் தலைவர் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/66595.html
Geen opmerkingen:
Een reactie posten