தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 22 april 2014

ஞானசார தேரருடன் பகிரங்க விவாதம் நடாத்த அசாத் சாலி அறிவிப்பு !!!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருடன் பகிரங்க விவாதமொன்றை நடாத்த விரும்புவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், புனித குர்ஆனுக்கு எதிராகவும் கலபொடத்தே ஞானசார தேரர் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்களும் குரோதப் பிரச்சாரங்களுக்கும் பதிலளிக்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மதத்தவர்களின் மீது குரோத உணர்வுடன் பொதுபலசேனா இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு முஸ்லிமும் தம்முடன் விவாதம் செய்ய முன்வரவில்லை என ஞானசார தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாகவும். இதில் உண்மையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரங்க விவாதமொன்றை நடாத்த முன்வருமாறு தாம் எழுத்து மூலம் கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்கள் சமாதானத்தையே விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1398154202&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten